பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 194 திருக்குறட் குமரேச வெண்பா மேலுள்ள எழில் என இது குறித்துள்ளது. இந்தக் குறளேக் கருத்தில் கொண்டே இவ்வாறு இது விருத்தி அடைந்து திருத்தமுற வந்திருக்கிறது. மனேக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை-இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு. (நான்மணி 20) கல்வி யறிவில்லாதவன் உருவம் பாழ் என இ.து உணர்த்தியுளது. அரும் பெறலான மனிதப் பிறப்பும் கல்லாமையால் கடையாய் இழிந்து ஒழிகின்றது. கல்ல தான் நல்ல கவினுடையன் ஆயினும் நல்லார் அவனே நயவார்காண்-ஒல்லும், ஒளியில் விழிதான் உருவுடைய தேனும் வெளியில் இழிவாய் விடும். ஒளி இல்லாத கண் உருவமா யிருந்தாலும் விழி குருடான அது இழிவேயுறும்; அது போல் கல்லாதவன் எழிலுடையன் ஆபினும் தெளிவிலன் ஆதலால் இழிவே யடைவான். கலே யுருதவன் எங்கும் புலே யுறுகின்ருன். நல்ல அழகன யிருந்தாலும் கல்லாதவனே கல்லார் மதியார். எள்ளி இகழ்ந்து அயலே தள்ளியே விடுவர். இவ்வுண்மையைச் சண்பகம் உணர்த்தி கின்ருள். ச ரி த ம் சண்பகம் என்பவள் சோழ நாட்டிலே உறையூரில் இருந்தவள், சிறந்த கல்வியறி வுடையவள். அரிய கலை கள் பலவும் பயின்று பெரிய மதிமாண்பு மருவி யிருங் தமையால் பருவம் அடைந்தும் எவரையும் மணந்து கொள்ளாமல் அறிவு வீறுகொண்டு ஆணே செலுத்தி வந்தாள். கலேகலங் கனிந்து சிறந்த அழகியாய் உயர்ந் திருந்த இவளே மணந்து மகிழ விழைந்து அரசிளங் குமரரும் ஆவலித்து வந்தனர். அழகிலும் திருவிலும்