பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.98 திருக்குறட் குமரேச வெண்பா திரு வெறுத்துச் சொல்ல நேர்ந்தது; இகழ்ந்து தள்ளும் வறுமை புகழ்ந்து போற்ற நின்றது. கல்லாமையின் பழிகிலேகளைப் பல வழிகளிலும் கிளர்ந்து காட்டி மொழிந்து வருகிற அடிகள் அருமைச் செல்வமும் அதனேச் சாரின் சிறுமை யடைந்து சீரழிந்து போம் என இங்கே தெளித்திருக்கிரு.ர். இன்மையே இன்னுதது. (குறள் 1041) வறுமையின் கொடிய துயர கிலேயை இன்னவாறு யாண்டும் பரிதாபமாய்க் கூறிவருபவர் ஈண்டு அதனி னும் கொடிய துன்பமுடையது செல்வமே என்று குறித் துக் கல்லாமையின் பொல்லாத புலேயை எல்லாரும் ஒர்ந்து கூர்ந்து சிங்திக்கச் செய்துள்ளார். இன்னதே! என்றதில் ஏகாரம் பரிதாபமாய் ஒலித் திருத்தலே துணித்துணர்க. இனிய திருவையும் இன்தை தாக்கி யிழிவுறுத்துவது கல்லாத மூடம்: அந்தப் பொல் லாத பீடை யாதும் இல்லாத வாறு ஓதி புயர்ந்து கொள்க. மக்கள் உயர்வு ஆக்க கல்வியால் உளது. கல்வி கற்றவர் நல்ல அறிவுடையவர் ஆதலால் வறுமையுற்ருலும் நெறிமுறையே வாழ்ந்து புகழ் புண் னியங்களேச் செய்து இருமையும் பெருமை மிகப் பெறு கின்ருர். நூல்களேக் கல்லாதவர் சால்பான அறிவு இல்லாமையால் எல்லாச் செல்வங்களேயும் எய்தியிருங் தாலும் பொல்லாத புலேவழிகளிலே பழகித் தீமைகள் புரிந்து பழிபாவங்களே அடைந்து இழிவுறுகின்றனர். கல்வியின் இனிமையும் கல்லாமையின் கொடுமையும் இவ்வாறு யாண்டும் செவ்வையாக் காண வந்துள்ளன.

  • அறிவு இல்லாதவர்க்குச் செல்வம் அல்லது பகைவேறு உண்டோ?’’ (திருவிளேயாடல்)

அறியாமையோடு திருவும் சேர்ந்தால் அதல்ை வி&ளயும் பழி கேடுகளே இது தெளிவா விளக்கியுளது.