பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல் லா ைம 2199 கல்லாதவன் கையில் செல்வம் வந்தால் பொல்லாத குரங்கு கையில் தீக்கொள்ளி தந்தது போல் எங்கும் அல்லல்களே யாம். அறியாமை யோடுஇளமை கூடுவதாம் ஆங்கே செறியப் படுவதாம் செல்வம்-சிறிய பிறைபெற்ற வாணுதலாய்! தானே ஆடும்பேய் பறைபெற்ருல் ஆடாதோ பாய்ந்து. (பழமொழி) கல்லாதவன் கண் செல்வம் உண்டானுல் வெறி கொண்ட பேயனுய் வெய்ய கேடுகளே யாண்டு அவன் விரைந்து செய்வன் என இது வரைந்து குறித்துளது. அண்ணலந் திருவிடை அழுந்தி யாரையும் எண் ணலன் செந்நெறி இயற்ற ஒர்கிலன் கண்ணிலன் மதியிலன் களிப்பின் ஒர் மகன் மண் ணிடை விரை வொடு வழிக்கொண் டாலென. (கந்தபுராணம்) வாலிபம் பெருநிலக் கிழமை மாண்பொருள் மேலறி விலாமையில் ஒன்று மேவினும் சிலமும் குடிமையும் சிதையுமால் இவை நாலும் உள் ளவர்செயல் நவில வேண்டுமோ ? (செவ்வந்திப் புராணம்} சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே வறிய புன் செருக்கு மூடி வாயுள்ளார் மூகர் ஆவர் பறியணி செவியு ளாரும் பயிறரு செவிடர் ஆவர் குறிபெறு கண்ணுள் ளாரும் குருடராய் முடிவ ரன்றே. (குசேலம்) கல்லாது நின்ற கடையன் திருவடைந்தால் நல்லாரை எள்ளி நகைபுரிவன்-பொல்லாத அல்லல் பலசெய் தகம்செருக்கித் தீமையே புல்லி இழிவன் புறம். கல்வி யறிவு இல்லாதவனிடம் செல்வம் சேர்ந்தால் அதல்ை விளேயும் துயரங்களேயும் பழிகேடுகளேயும்