பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**200 திருக்குறட் குமரேச வெண்பா இவை துலக்கி யுள்ளன.கவிகளில் மருவியுள்ளபொருள் களேயும் குறிப்புகளேயும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். கல்லாத வழி எல்லா இழிவுகளும் எய்து கின்றன. கற்று எல்லா உயர்வுகளேயும் எய்துக. கொடிய வறுமையும் கற்றவனிடம் இனியதாய் இன்பம் தருகிறது. நல்ல செல்வமும் கல்லாதவனிடம் போல்லாத தாய்த் துன்பம் புரிகிறது. கல்வி கல்லாமை செல்வம் வறுமை என்னும் இவை இங்கே விசித்திர கிலே களில் வினுேதமாய் அறிய வங்துள்ளன. கற்றவனது வறுமை மதியுறு மறுவாய் மகிமை புற்று எவ்வழியும் துதி மிகப் பெறுகின்றது. கல்லாதவனது திரு இருள் படு பொருளாய் இழி வடைந்து யாண்டும் பழிபடிந்து படுதுயருறுகின்றது. ஒரு பொருளும் இலன் ஆயினும் கற்றவன் எல்லாம் உடையனுய் எங்கும் உயர்ந்து திகழ்கிருன். பல செல் வங்களேயுடையயிைனும் கல்லாதவன் யாதும் இல்லாத வனுய் இழிந்து எங்கும் மதிப்பிழந்து படுகிருன். கல்வி உள்ளத் திருவாய் உணர்வை ஒளி செய்து வருகிறது: வரவே அவன் அரிய பெரிய பாக்கியவாய்ை அதிசய மகிமைகளே யாண்டும் அடைந்து கொள்கிருன். கற்றவன் திருவுடையய்ைச் சிறந்து வாழ்த்தக்கவன். கல்லாதவன் திருவிலியாய் இழிந்து தாழ வுரியவன். இந்த நியதி மாறுபடின் உலக மக்கள் பார்வைக்குக் கவலையாகிறது; ஆகவே பழவினைகளே எண்ணி கிலேமை களேக் கருதி நெஞ்சம் தேறி ஆறுதலடைய நேர் கின்றனர். கல்லார் திரு அவலமாய்க் கவலே யுறுகிறது. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரனம்-தொல்லே வினேப்பயன் அல்லது வேல்.நெடுங் கண்ணுய் ! நினைப்ப வருவதொன் றில். (நாலடி 265,