பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 12 திருக்குறட் குமரேச வெண்பா உயிர் எழும்படி பாட வல்லவர் ஆ த லா ல் இவரது கொலேத்தண்டம் தமிழ்மொழியைப் பு னி த மா. க ப் பேணும் இனிய பணியாய் இசைந்து கின்றது. தன்னை ஆதரித்து வந்த மன்னன் இறங்துபோன பின் அவனு: டைய மகனும் இவரை மரியாதையுடன் பேணி வந்தான். குலோத்துங்கன் என்னும் அவ் அரசனது அரியாசனத் தின் அருகே சரியாசனமாய் இவர் வீற்றிருந்தார். மங் கல நீர் ஆடி மணிமுடி குடி முதலில் அவன் அரியனே ஏறும்போது இவர் ஒரு துதி கவி பாடினர். அந்தப் பாட் டின் பாதியை ஒட்டி அரசன் இவரைத் துதித்து உரைத் தான். கவி அரசும் புவி அரசும் கலந்து பாடிய அக்கவி சுவை மிக வுடையது. இருவருடைய கல்வியறிவும்: பீடும் பெருமை பும் என்றும் நாடு அறிய கின்றுள்ளது. ஆடும் கடைமனிை நாவசை யாமல் அகிலம் எங்கும் நீடும் குடையைத் தரித்த பிரான்; இந்த நீரிைலத்தில் பாடும் புலவர் புகழ் ஒட்டக் கூத்தன் பதாம் புயத்தைச் m * * -- " - . ." ---- .." ------- =- ■ - .. - #. - குடும் குலோத்துங்க சோழன் என் றே என்னேச் சொல்லுவரே இந்தப் பாடலின் அமைதியைக் கருதிக் காணுக. தரித்தபிரான் என்று கூத்தர் சொல்லிய வுடனே அரசன் இவரைப் புகழ்ந்து சொல்லியிருக்கும் அழகை வியந்து நோக்கி காம் உவந்து கிற்கின்ருேம். இவரது அடியை முடியில் குடி யுள்ளதாகப் படி ஆளும் அரசன் பணிவோடு சொல்லவேண்டுமாயின் இவரது கல்விப் பெருமையும் தெய்வத் திருவருளும் எவ்வளவு கிலேயில் இசைக்திருக்கும் என்பதை எளிதில் தெளித்து கொள்ள லாம். சிறந்த புவி வேந்தரும் போற்றி மகிழ இக் கவி: வேங்தர் ஏற்றம் அடைந்துள்ளமையை அக்காலத்தில்: இருந்த பலரும் வியந்து நின்றனர். கற்றவருக்குள்ளே இவர் பெரிய பாக்கியசாலி என்று முருக தாசர் மிகவும் வியங்து உரிமையுடன் இவரை உவந்து பாடியிருக்கிரு.ர்.