பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2228 திருக்குறட் குமரேச வெண்பா கள் புரிவன. ஆதலால் அவை ஈனமாய் இழிந்து படுகின் றன. ஞானம் உடையன. நன்மைகளாய் வருகின்றன. அறிவை மயக்கி அவலப் படுத்துவன யாவும் சிறு மைகளாய்ச் சீரழிந்து போகின்றன. இளிைய இயல்புகளே நோக்கியே அரிய உயர்வுகள் அமைகின்றன. சீவ இதம் தேவ அமுதமாய்த்தெளிந்து எங்கும் சிறந்து திகழ்கிறது. அன்னவள் ஆடல் கண்டார், அவல மே காண நேர்ந்தார்; பின்னவள் பாடல் கேட்டார், பிழைபல பெருக நின்ருர், இசை கேட்கும் நசையால் விளங்துள்ள வசைகளே இது வரைந்து காட்டியுள்ளது. பீடைகள் பெருகி வருகிற, ஒசைகளுக்கு ஆசையாய்ச் செவி சாய்க்க லாகாது. கேள்வி என்னும் சொல் உயர்ந்த குறிக்கோள்களே யுடையது. சிறந்த ஞான சீலங்கள் தோய்ந்தது. உள்ளத்தை உயர்த்தி, உணர்வை ஒளிசெய்து. உயிர்க்கு உறுதியாய் உய்தி தருவது எதுவோ, அதுவே கேள்வி ஆகிறது. கல்வியின் இனம் ஆயினும் அதனி: னும் இ.து எளிமையும் தெளிவும் இனிமையும் மருவி எவர்க்கும் நயமாய் இதம் புரிகிறது. இளேயர் முதியச் முதலிய எவரும் இதல்ை உயர் பயன் பெறுகின்றனர். செல்வத்தை ஆவலோடு யாவரும் தேடுகின்றனர். அதைக் காட்டிலும் கேள்வி சிறந்தது. ஆதலால் இதனே ஒல்லும் வாயெல்லாம் ஊக்கி ஈட்டிக் கொள்ளவேண்டும். தலை என்றது மேலானது என்னும் பொருளில் வங் தது. செவிச் செல்வம் தல என்ற தளுல் புவிச் செல்வங் கள் கடை என்று கழிக்கப்பட்டன. செல்வங்கள் எவற். றினும் கேள்வி சிறந்தது என இவ்வாறு வியந்து புகழ்ந்தது இதன் மகிமையை உணர்ந்து தெளிந்தே. செல்வம் என்ன செய்யும்? உலக கிலேயில் பலவகை மினுக்குகளே உளவாக்கும்; உயர்ந்த உடை, சிறந்த அணி, பெரிய மாளிகை, அரிய வாகனங்கள், இனியக் போகங்கள் லிய தேக சுகங்களே நல்கி வாம். (ԼԶ இவை யாவும் பொறி வெறிகளே விளேத்து ஊன உடலே