பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 223 1 மும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா! முத்தம் தருகவே! (முத்துக் குமாரசுவாமி பிள்ளே த்தமிழ்) தனது அருமைத் திருமகன் முருகனிடமிருந்து ஒரு மறையின் உபதேசமொழியைக் கேட்டுச் சிவபெருமான் உளம் மிக மகிழ்ந்துள்ள கிலேயை இது உணர்த்தி யுளது. செவிகள் விருந்து அயன வார்த்தை ஒன்று மொழியும் என்றது சொன்னவாயும் கேட்ட செவியும் என்ன கிலேயின! என்பதை இனிது காண வந்தது. கலே நலம் கனிந்த இனிய உணர்வுரையே கேள்வி. அதுவே உயிர் அமுதமாய்த் திருமலிங்துள்ளது; ஆகவே செவிச் செல்வம் என அது வியந்து கூற நேர்ந்தது, அறிவு கலம் இல்லாத வெறுமொழிகளேக் கேட்பது கேள்வி ஆகாது. உயிர்க்கு உறுதியான உயர்கலங்களே ஒர்ந்து கொள்வதே ஆர்ங் த கேள்வியாம். கேட்டல் சிக் தித்தல் தெளிதல் என வளர்ந்து கிளர்ந்து வங்துள்ள அதன் நாட்டமும் நலனும் நன்கு அறிந்து கொள்ளலாம். உயிர் துயர் நீங்கி உய்ய உரிய செய்ய கேள்வியே. மெய்யான திரு: மேலான தெய்வ அமுதம். மறவுரையும் காமத்து உரையும் மயங்கிப் பிறஉ ை யும் மல்கிய ஞாலத்து-அறவுரை கேட் தும் திருவுடை யாரே பிறவியை மீட்குட் திருவுடை ர். (அறநெறிச்சாரம் 1) பழி பாவங்கள் படிந்த இழிமொழிகளே எங்கனும் நிறைந்துள்ளன. அத்தகைய இவ்வுலகில் வித்தகமான புகழ் புண்ணியங்கள் பொருங்திய விழுமிய உரைகளைக் கேட்பதே நலமாம்; அதுவே பிறவித் துயரை நீக்கிப் பேரின்பம் தரும்; அந்தச் செவிச் செல்வம் உடையவரே சிறந்த தெய்வத் திருவாளராய் உயர்ந்து விளங்குவார் என முனைப்பாடியார் இப்படிப் பாடியிருக்கிரு.ர். மேலோர் கூறுகிற உறுதி நலங்களே ஒர்ந்து கொள் ேைத செவி பெற்ற பயனும். இருமையும் பெருமையாய்: