பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:36 திருக்குறட் குமரேச வெண்பா பெரிய தேவைகளாய்ப் பெருகி வந்துள்ளன. அவற்றி னும் கேள்வி அதிகமான தனியுரிமை யுடையது. உடலே வளர்த்து வருகிற உணவினும் உயிரை வளர்த்து வருகிற கேள்வி எத்துணே மகிமை வாய்ந்தது: எத் தகைய தலம் உடையது! உய்த்து உணர வேண்டும். உணர்வுரை உணவினும் உயிர்க்கு உயர்கதி யுறு: வது. உணவு வாய் வழியே புகுந்து வயிற்றில் அமர்த்து உடலுக்குச்சிறிது வலிமையைத் தந்து உடனே ஒழியும்: உணர்வுரை செவி வாயிலாகச் சென்று உள்ளத்தில் கின்று ஒளி மிகுந்து உயிர்க்கு இனிய உறுதிகலனே என்றும் கிலேயாய் நன்கு புரிந்தருளும். உணர்வு நலனும் உணவு கிலேயும் உணர வங்தன. சிறிது வயிற்றுக்கும் என்ற தல்ை செவிக்கு உணவு பெரிதும் இடவேண்டும் என்பது தெரிய வங்தது. கேள்வி பெருகப் பெருக உள்ளம் நலமாய் உணர்வு தெளிவாய் உயிர் ஒளி மிகப் பெறுகின்றது. உடலுக்கே உணவை யூட்டி உணர்வு கெட்டு வரு கின்ற உலகினுக்கு, உயிருக்கு உரிய இனிய உணவை: எடுத்துக் காட்டி அதனே உண்டு உவந்து வியனும் உயரும்படி அடிகள் இவ்வாறு உணர்த்தி யுள்ளார். வயிற்றுணவைச் சுருக்கிச் .ெ ச. வி உணவைப் பெருக்கி வருபவர் தேகசுகமும் சிவ ஒளியும் மேவி மகிழ் கின்றனர். ஞான போனகம் நன்கு தெரிய வந்தது. உயிருக்காகவே உடல் அமைந்திருக்கிறது. செவி உணவு துய்க்கவே வயிறு ணவு வாய்ந்துள்ளது. கேள் வியை நன்கு கேட்டு நலமாய் வாழவே உடலுக்குக் கொஞ்சம் ஊட்டம் போட வேண்டும் என்பார் வயிற் றை இங்ங்னம் இனமாக் காட்ட நேர்ந்தார். ஈய என்றது வயிற்றின் இழிவு தோன்ற வந்தது. ஈ என் கிளவி இழிந் தோன் கூற்றே. (தொல் காப்பியம்} உயர்ந்தவன் எதிரே இழிந்தவன் ஒடுங்கி கின்று: பல்லேக் காட்டி யாசிக்கும் சொல்லேக் காட்டியது, வயிற்