பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2239 சிதைபொருள் இன்றிச் செந்நெறி தழி.இ. உதையத்து இவரும் ஒண்சுடர் போல எல்லா மாந்தர்க்கும் இருள் அற விளங்கும் செல்லாறு இது எனச் சொல்லுதல் வேண்டிச் சாலவை நாப்பண் சலத்தில் தீர்ந்த கேள்வி யாளரை வேறுதெரிந்து அமைத்து வாதம் வேண்டிய சாலங்காயன். (பெருங்கதை 5 : 7) யூகி, சாலங்காயன் என்னும் இரண்டு மதிமந்திரிகள் தலைமையான புலமைத் துறைகளைக் குறித்துத் தருக்க வாதம் செய்ய நேர்ந்தனர். அந்த அவையில் அப்பொ ழுது நீதிபதிகளாய் அமர்ந்து தீர்ப்புக் கூற நேர்ந்தவர் களே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். கேள்வியாள ரைத் தெரிந்து வேறு அமைத்து என்ற தல்ை கேள்வித் திறத்தின் மதி நலத்தையும் அதனே யுடையாரது அதிசய மாட்சிகளையும் அறிந்து கொள்ளலாம். இத்தகைய வித்தக விவேகங்களே அருளி வருத லால் எத்தகையோரும் கேள்வியைச் செவிச் செல்வ: மாக நுகர்ந்து சிறந்த மேதைகளாய் உயர்ந்து விளங்கு கின்றனர். கல்வியினும் கேள்வி எளிதே ஒளி தருகிறது. கற்றலின் கேட்டல் சிறப்புடைத்தால்; கற்பானுக்கு உற்ற இளமைபொருள் ஊக்கம் நோய் இன்மைகுலம் மற்றின்ன வேண்டுமால், வேண்டாநூல் வல்லார்வாய் முற்றுறக்கேட் பார்க்கு முயன்று. (இன்னிசை) கேள்வி.நலனே இது கிழமையாய் விளக்கியுளது. பசியையும் மறந்து மேலோர் கேள்விகளே விழைந்து கேட்பர். அவற்ருல் அவர் உயர்ந்து திகழ்வர். இவ்வுண்மை நைமிசவாசிகள் பால் அறிய வங்தது. ச ரி த ம். நைமிசவாசிகள் என்பவர் கைமிசம் என்னும் இனிய வனத்தில் இருந்தவர். சிறந்த கல்வியறிவும் உயர்ந்த விரத ஒழுக்கங்களும் உடையவர். புனிதமான இனிய இடத்தில் தனியே இருந்து தவம் புரிய விரும்பிய முனின்