பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2240 திருககுறட குமரேச வெண்பா வர் சிலர் ஒருமுறை பிரமனே அணுகினர்; ஞான யோகங். கள் பயில நல்ல தலம் ஒன்றைச் சொல்லியருளும்படி எல்லாரும் அயனேத் தொழுது வேண்டினர். அவர் விருப்புடன் ஒரு தருப்பையை எடுத்து வட்டமாகச் சக் கரம் போல் வ8ளத்து உருட்டி 'இது போய் நிற்கும் இடமே கிவிர் இருந்து வாழ இனிய தலமாம்' என்று இயம்பி விடுத்தார். அது உருண்டு போய் மேருவின் தென்பால் விழுந்தது. நேமி நின்ற இடம் ஆதலால் அதற்கு கைமிசம் என்று பேர் வந்தது. நீர்வளமும் நில நலனும் குளிர் மரங்களும் நிறைந்த அந்த வனத்தில் ஞான சீலர் பலர் குடி எறினர். சவுனகர், கண்ணுவர், சுமந்து, கவுதமர், கற்கர், முற்கலர், போதாயனர், உரோமசர் முதலிய மாதவர்கள் யாவரும் அங்கே ஆதர வுடன் அமர்ந்து கலைஞானங்கள் பயின்று, தவயோகங் கள் புரிந்து வந்தனர். எங்கனும் குளிர்பொழில்கள் சூழ்ந்திருந்தமையால் அந்த வனம் பலவகை நலங்கள் மலிந்து விழுமிய கிலேயில் எழில் மிகுந்திருந்தது. கலே பயின் றிடலால்,வெண்மைகாட்டிய மெய்யால்,அன்னம் குலவிய நடையால்,பூமேல்கொள்ள லால்,குழைகள் தம்மால், நிலவுநான் மறையோர் தம்மை நீங்கிடாது இருத்தலால்சீர் நலமிகு நைமிசம் தான் நாமகட் பொருவு மாதோ. (1) விண்டுரத் திருத்த லானும் விரிந்தபூ வாசத் தானும் மண்டலத் துதித்த லானும் மதியொடு தோன்ற லானும் அண்டர்வை யகத்து ளோருக்கு ஆக்கம் உண்டாக்கலானும் தண்டலே நெருங்கு நைமி சாரணியம் பொன் ஆமால். (2). உலகெலாம் பெற்றே பச்சை உடம்பொடு விளங்க லானும் நிலைபெறு முதலி னேரே நின்று வாதாட லானும் மலே மக வாகை யானும் வண்டிரி மலர்க்கண் ணனும் தலைமைசேர் உமையை நேராம் நைமிசாரணியம் தானே. (மச்சபுராணம்) சரசுவதி, இலட்சுமி, உமாதேவியாரைப் போல் அங்த வனம் அழகிலும் வளத்திலும் ஞானத்திலும் தலே சிறந்திருந்தது என இங்ங்னம் சிலேடை அணியால் வருணித்துள்ளார். இத்தகைய உத்தம தலத்தில் வாழ்ங்.