பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 242 திருக்குறட் குமரேச வெண்பா உணர்வின் ஒளிகாண் உயர்கேள்வி:ஆன்ம உணவா நுகர்க உவந்து. செவி உணவு சீவ அமுதம். ക്കു 413. திண்டோட் சனமேயன் தேர்ந்துயர்ந்தான் கேள்விஒன்று கொண்டதனுல் என்னே குமரேசா-கொண்ட செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (கூ) இ-ள். குமரேசா! கேள்வியால் சனமேசயன் ஏன் சிறந்த மேன்மை எய்தி உயர்ந்தான்? எனின், செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் ஆன்ருர் ஒடு கிலத்து ஒப்பர் என்க. H : סדץ H 語 |கேள்வியாளர் தேவர் ஆவர் என்கிறது. செவிஉணவு ஆகிய கேள்வியை உடையவர், அவி உணவினே யுடைய அமரரோடு இ&ணயாய் இங் நிலவுல கத்தில் தலைமையா நேர்ந்துள்ளனர். கேள்வி செல்வத்துள் செல்வம்; உணவினுள் அரிய உயிர் உணவு என முன்பு அறிந்தோம்; இதில் அதை உவந்து உண்பவர் உம்பராய் உயர்ந்து ஒளி மிகுந்து சிறந்து விளங்குவர் என்பதை உணர்கின்ருேம். கல்வியறிவிற்சிறந்த பெரியோர்கள் கூறுகிற நல்ல உறுதி மொழிகளே நயந்து கேட்பதே கேள்வி ஆதலால் அந்த இயல்பும் செயலும் இனமும் சுவையும் தெரியச் செவி உணவு எனக் கேள்வியை விளக்கி அரு எளினர். வாய்க்கு உணவு போன்று செவிக்குக் கேள்வி. வாய், உணவைக் கொள்ளாது ஒழியின் உடன் மெலிந்து தளர்ந்துபடும்: செவி, கேள்வியை இழந்து விடின், உணர்வு வலியிழந்து போம்; உள்ளம் தெளிவு ஒழிந்து உழலும்; உயிர் நலிவுழங்து கைங்து கிற்கும்.