பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2246 திருக்குறட் குமரேச வெண்பா உற்ற உணர்வை உயர்த்தி ஒளிசெய்து பெற்ற பிறவிப் பெரும்பயனே-முற்றவே எய்தி மகிழ இனிதுறலால் கேள்வியே தெய்வ அமுதம் தெளி. செவியுணவாகிய கேள்வி இவ்வாறு திவ்விய மகி மையைச் செய்தருளுகிறது: ஆகவே உயிர்க்கு அது உய்தி கிலேயமாய்த் தெய்வ அமுதமா கின்றது. மானவரையும் கேள்வி வானவர் ஆக்கும்; இந்த ஞான போனகத்தை நயந்து பேணி எவ்வழியும் விழைந்து நுகர்ந்து யாவரும் தேவராய் உயர வேண்டும். சிறந்த கேள்வியாளர் நிறைந்த மேதைகளாய்த். தெளிந்து உயர்ந்த அமரர் போல் ஒளிே மிகுந்து விளங்கு வர். அவரது உணர்வு ஆன்ம உய்தியை அருளும். இவ் வுண்மை சனமேசயன் பால் தெரிய வந்தது. o ச ரி த ம் சனமேசயன் என்பவன் பரிட்சித்து மன்னனுடைய அருமைப் புதல்வன். பலகலைகளிலும் வல்லவன். சிறந்த போர் விரன். பெருங் கொடையாளன். அரசு முறைகளே நன்கு தெரிந்தவன். தன் நாட்டைப் பலவகைகளிலும் வளம் பெறச் செய்து குடிகளே இனிது பேணி இவன் கோமுறை புரிந்து வந்தான். தன்னுடைய தந்தையைக் கார்க்கோடகன் என்னும் நாகம் திண்டிக் கொன்று விட் டமையால் அந்த இனத்தை மிகவும் இவன் வெறுத்தி ருந்தான். மனத்தில் மண்டியிருந்த சினத்தினுல் உதங்க முனிவரைக் கொண்டு சர்ப்பங்கள் எல்லாம் சாகும்படி ஒரு யாகம் செய்தான். அந்த வேள்வித் தீயில் பல்லா யிரக் கணக்கான பாம்புகள் வந்து பாய்ந்து மாய்ந்தன. நல்ல நீதிமாயிைருந்தும் பகைமை யுணர்ச்சியால் அவ் வாறு திதுபுரிந்து வருவதைக் கண்டு தேவரும் இரங்கி ஞர். தேவ குருவாகிய வியாழனே இந்திரன் இவன் பால் அனுப்பி இதம் புரிய வேண்டின்ை. அந்த மதிமான் வங்து அாவின் பிழைகளே மன்னித்தருளும்படி இம் மன் னனிடம் கூறினன். அப் பெரியவருடைய அறிவுரை