பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2256 திருக்குறட் குமரேச வெண்பா கல்லா திருந்தாலும் கற்ருர்வாய்ச் சொற்கேட்பின் எல்லா நலமும் எளித மையும்-பொல்லா இரவும் மதிவாய் எழில்நில வெய்தின் உரவொளி செய்யும் உலகு. அல்லல் இருளுக்கு அருள் ஒளியாம் கல்லோர்வாய்ச் செல்ல மொழிகேள் தினம். கேள்வி நெஞ்சக் கவலே நீக்கும் சஞ்சீவி. 415. உள்ளம் தளரைவர் உற்றவியா தன்வாய்ச்சொல் கொள்ளவுயர்ந் தாரேன் குமரேசா-மெள்ள இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (டு) இ-ள் குமரேசா மனம் தளர்ந்து மறுகி நின்ற பாண்டவர் வியாசர் சொல்லேக் கேட்டு ஏன் உள்ளம் தெளிந்து உறுதி மீதுர்ந்து பொறுதியுடன் சென்ருர்? எனின், ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே என்க. கேள்வி இடர் நீக்கி இனிது காக்கும் என்கிறது. சீலமுள்ள மேலோர் வாய்மொழி இழுக்கி இடையூறு உற்ற இடத்து மனிதர்க்கு ஊன்றுகோல் போல் நின்று உறுதியாய் இனிது உதவும். இழுக்கல் என்றது வழுக்கல் நிலத்தை. உழி = இடம்: பக்கம். நீர் பாய்ந்து சேறுபட்டுப் பாசி படர்ந்துள்ள இடத் தில் யாரேனும் நடந்து சென்ருல் கால் சறுக்கி விழ நேர்வர்; அவ்வாருன வழுக்கல் நிலம் இழுக்கல் என நேர்ந்தது. இழுக்கு நேராமல் இயன்றது தெளிக. இழுக்கலில் சிக்கி ஒருவன் வழுக்கி விழ நேர்ந்த போது இடையே ஆதரவாய்த் தாங்கி நிற்கும் கைத்தடி ஊன்றுகோல் என உற்றது. தரையில் உரமா ஊன்றி கிலேயாய் கின்று கொள்ள நேர்ந்த ஒரு கருவி ஆர்ந்த காரணப் பெயரோடு ஈங்கு ஒர்ந்து உணர வந்தது.