பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 226 f தெய்வ வாணிநற் செந்தமிழ் இயல் இசை தெரிந்து பாடைக ளும்போய் மெய்ய தாகவே பொருள்களும் விளங்கிட விளம்ப வல்லவர் ஏனும் மையி லாவகை மொழிவது.ஒன்று அவர்செயல் மருவல் ஒன்றெனில் அத்தை ஐய மூவரில் முதல்வரே மொழியினும் ஆத்த வாக்கியம் என்னுர். (3) (அனுபவசித்தி) விரிந்ததல் வேத புரானங்கள் ஆகமம் மிக்ககலே தெரிந்து படித்துப் பொருள்செப்பித் தாம் நிலே சேர்ந்துநில்லாது இருந்தசண் டாளரின் ஏற்றம் கழுதை எழில்குங்குமம் பரிந்து சுமந்தும்பின் வஞ்சம் பண்ணுத பயன் எழிலே. (அறிவானந்தசித்தி) எவ்வளவு நூல்களே எவ்வாறு முழுதும் படித்துத் தேறினாலும் ஒழுக்கம் இல்லேயானுல் இழுதைகளாய் அவர் இழுக்கமே அடைவர்; அவருடைய வாய்ச் சொற் கள் கேட்கத்தக்கன அல்ல என்னும் இவை ஈண்டு உள்ளம் கூர்ந்து உணர வுரியன. பாடல்களில் படிங் துள்ள குறிப்புகளேயும் பொருளின் சிறப்புகளேயும் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். சிறந்த கல்வியறிவும் சீலம் தோயாத போது ஞாலம் மதியாதபடி இழிந்து போதலால் ஒழுக்கத்தின் உயச் நிலையை உணர்ந்து வியந்து உவந்து கொள்கிருேம். மனித வாழ்க்கை பலவகை இடையூறுகளேயுடை யது. தேக யாத்திரையில் நேருகின்ற நெஞ்சக் கவலே. களே நல்லோர் வாய்ச் சொல் ஒல்லேயில் நீக்கியருளும். மருந்த&னய அம்மொழிகளேச் செவி விருந்தாக உவங்து கேட்டு உணர்ந்து தெளிந்து உயர்ந்து கொள்ளுக. ஆன்ருேர் வாய்மொழி நல்ல ஊன்று கோல் போல் உயிர்க்கு உறுதியாய் உதவி புரிந்து எவ்வகை இடர் களேயும் இயல்பா நீக்கி உயர்கலன்களே நயமா.அருளும்.