பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2264 திருக்குறட் குமரேச வெண்பா 416. பூத்த புகழேந்தி போதங்கேட் டேன்ஒட்டக் கூத்தரையும் வென் ருர் குமரேசா-காத்தே எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (கா) இ-ள் குமரேசா : புகழேந்தியின் போதனைகளைக் கேட்ட வர் ஒட்டக்கூத்தரையும் ஏன் வென்று விளங்கிர்ை ? எனின், எனைத்து ஆனும் கல்லவை கேட்க, அனேத்து ஆனும் ஆன்ற பெருமை தரும் என்க. கேள்வியால் அதிசய மகிமைகள் வரும் என்கிறது. எவ்வளவு சிறிது ஆயினும் நல்ல அறவுரைகளேக் கேட்டுக் கொள்க: அவ்வளவானே அக்கேள்வி நிறைந்த மேன்மைகளே விரைந்து அருளும், எனேத்து என்றது சிறிய அளவைக் குறித்தது. கேள்வி அமுதத்துளி என ஈண்டு அறிய வந்துளது. ஒரு சொல்லே எனினும், அரை நிமிடமே ஆலுைம் நல்லோரிடமிருந்து நல்லதைக் கேள்! அது நலம் பல தரும் என்று நயமா ஊக்கியிருக்கிரு.ர். கேட்கும் காலமும், கேட்கப்படும் பொருளும் எவ் வளவு குறுகியனவா யிருந்தாலும் அவற்ருல் அரிய பெரிய பயன்கள் உளவாம்; ஆகவே ஆனவரையும் சமையம் வாய்த்தபோதெல்லாம் கேள்வியை விழைந்து போற்றிவரின் உயர்ந்த ஏற்றம் விளேங்து வரும். கேள்வி உள்ளக் கவலைகளே நீக்கும்; அல்லல் நேரா உமல் ஊன்றுகோல் போல் உதவும் என முன்பு அறிந் தோம்; இதில் அதல்ை உளவாகும் மகிமை மாண்புகளே உணர்ந்து வியங்து உவந்து கொள்கின்ருேம். காலம் உருவம் அற்றது; விரைவில் கழிவது ஆத லால் அது வாய்ந்துள்ள பொழுதே நல்லதை ஏதேனும் கொஞ்சம் கேட்டு நெஞ்சம் தெளிந்து கொள்க என்பார் எனைத்து ஆனும் கல்லவை கேட்க என்ருர்,