பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227Ꮾ திருக்குறட் குமரேச வெண்பா போர்முகத்தில் வீடுமர் பொருது விழுந்ததும், இவ ரது கிலேமையைக் கண்டு இருவகைச் சேனைகளும் உருகி கின்றதும், அருச்சுனன் அம்புகளால் அமைத்த வீரப் படுக்கையில் இத்திரன் கிடங்ததும், தமது தவயோக சித்தியால் பருவ காலத்தை எதிர்நோக்கி உயிரை விடாது வைத்திருந்ததும், அரிய பரிவுக் காட்சிகளாப் இங்கே பெருகி யிருக்கின்றன. கல்வி, கேள்வி, அறிவு. ஆற்றல், அடக்கம், பொறுமை, அமைதி, தருமம். கருனே, சத்தியம், வீரம் முதலிய குணகணங்கள் யாவும் அந்தோ! போயினவே! என்று இவருடைய மரண கிலேயைக் குறித்து எல்லோரும் அலறி அழு திருத்தலால் இந்த உத்தமரின் தகவுகளேயும் மகிமை களேயும் நாம் உய்த்துணர்ந்து கொள்கிருேம். நல்ல கல்வியாளராயிருந்தும் சுகமுனிவர் முதலிய மகான்களி உம் பலவகையான உணர்வு நலங்களே இவர் கேட்டு உவந்துள்ளார். கேள்வித் தெள்ளார் அமுதம் விருந்தா நுகர்வான் என்ற தல்ை இவர் விழைங்து கேட்டிருக்கும் விதங்கள் புலம்ை. மரணப்படுக்கையில் இரு ந் து ம் அயலே மறுகி கின்ற தருமன் முதலானவர்களேக் கருனே யுடன் கனிந்து நோக்கி உலகவாழ்வின் கிலேமைகளேயும் உயிர் பரங்களின் இயல்புகளேயும் தெளிவாக உணர்த்தி யருளிர்ை. அமர்க்களத்தில் அன்று இவர் போதித்த தரும நீதிகள் உலகம் எங்கும் பரவி இன்றும் ஒளி புரிந்து கிற்கின்றன. மனம் கலங்கி மதி தடுமாறி யிருங் தும் இவர் கூறிய தெளிவுரைகளேக் கேட்டு எல்லாரும் வியங்து கொண்டாடிப் புகழ்ந்து போற்றினர். இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் பிழைத்துணரினும் பேதைமை சொல்லார் என்பதை உலகம் காண இந்த அதிசய மேதை அன்று அங்கு உணர்த்தி கின்ருர். கேள்வி கலமுடையார் கேளாக எவ்வுயிர்க்கும் வேள்வி புரிவர் விழைந்து. நிறைந்த கேள்வி சிறந்த மேதையாம்.