பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2278 திருக்குறட் குமரேச வெண்பா கேட்டன ன் என்ப மன்னே கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்ரு ன். (இராமா: சவரி: 7) சவரி என்னும் தவமுதுமகள் கூறிய நெறிமுறை களேப் பரிவோடு கேட்ட இராமபிரானேக் கவி இவ்வாறு செவ்வையாக் காட்டியிருக்கிரு.ர். இந்தக் காட்சியில் கலங் துள்ள மாட்சிகள் கருத்துரன்றிக் கருதி யுணரவுரியன. கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர் வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் கின்ருன் என்ற இதில் எவ்வளவு சுவைகள் சுரங்துள்ளன : எத்துணேப் பொருள் நுட்பங்கள் நிறைந்திருக்கின்றன: உய்த் துணர்ந்து கொள்ள வேண்டும். இங்த அருமைத் திருக் குறள் அந்தக் கவிச் சக்கரவர்த்தியின் உள்ளத்தில் புகுந்து இவ்வாறு அமுத வெள்ளமாய்ப் பொங்கி வங் துள்ளது. காவியச் சுவைகளேச் சீவிய அமுதங்களா வார்த்து வருபவர் இடையிடையே தேவர் வாய்மொழி களேச் சேர்த்து யாவரும் வியப்ப உணர்த்தி வருகிரு.ர். வேள்வி அமுதால் விண்ணவர் விளங்கி எண்ணரிய மேன்மைகளே எய்தி இனிது திகழ்கின்றனர். கேள்வி அமுதால் மண்ணவர் மகிழ்ந்து புண்ணிய சீலர்களாய்ப் பொலிங்து புனிதமுடன் வருகின்றனர்.

  • கேட்டோர் மனம் உனக் கிளந்தவன் கடாவ மெய்த்தகு நுண்பொருள் மெத்தப் பன்னி உத்தர வாக்கியம் யூகியும் நிறீஇ.’’ (பெருங்கதை 5: 7)

உண்மையான நுண்பொருள்களே உரைக்கத் தக் கன: அவற்றைக் கேட்போர் உள்ளம் உவந்து நுகர்ந்து கொள்ள வேண்டும் என இது உணர்த்தியுளது. கேள்வி செவி வழியே புகுந்து உள்ளத்தில் உணர்ச்சியை விளேத்தருளுகிறது. மேதைகளின் வாய் மொழிகள் மெய்யான போதனே ஒளிகளாய்ப் .ெ பா லி ங் து வருதலால் அவை புனித கிலேமைகளேத் தருகின்றன.