பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2232 திருக்குறட் குமரேச வெண்பா கேள்வி நலம் இல்லாதவர் நல்ல அறிவு கலங்களே இழந்து விடுகின்ருர். விடவே உள்ளம் மழுங்கிப் புல்ல ராயிழிந்து நிற்கின்ருர். கல்லோர் உரைகள் அவர் செவி களில் செல்லாது போகின்றன. போகவே ஒன்றும் தெரியாமல் என்றும் ஈனராய் நின்று கழிகின்றனர். பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்ருல் நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலே தகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு. (நாலடியார் 237) அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்கும்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்; கவ்வித்தோல் தின்னும் குனுங்கர்நாய் பால்சோற்றின் செவ்வி கொளல் தேற்ரு தாங்கு. (நாலடியார் 322). கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில் தன் மநூல் புக்காலும் தங்காதே-சன்மமெலும்பு உண்டு சமிக்குநாய் ஊணுவின் நெய்யதனே உண்டு சமிக்குமோ ஒது. (நீதிசாரம் 80, புண்ணிய போதனைகளேக் கேளாதவருடைய புலை. கிலேகளே இவை உணர்த்தியுள்ளன. கவிகளைக் கூர்ந்து நோக்கிக் கருத்துக்களே ஒர்ந்து கொள்ள வேண்டும். பன்றி, காய் என்று குறித்தது, கேளாச் செவியரின் -ஈன கிலேகளே எண்ணி வருங்தி. பெரியோர்கள் கருனே யோடு கல்லதை நயத்து சொன்னலும் செவி கொடுத்தும் கேட்கலார் என்ற தல்ை அவரது கொடிய தீமையும் நெடிய மூடமும் நேரே தெரியவந்தன, குணுங்கர் =புலே யர். தலைமையான மனிதப் பிறப்பைப் பெற்றும் அழ. கான செவிகள் உற்றும் அவற்றின் பயனே இழந்து போவது பரிதாபமான பழி துயரங்களாய் கின்றது. கல்லாமையால் நேர்ந்த மூடத்தைக் கேள்வி யறி வால் நீக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மெய்த் துனேயையும் இழந்துவிடின் அவர் பொல்லாத முழு