பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2290 திருக்குறட் குமரேச வெண்பா ஒழிகின்றன. மெய்யறிவு விரிந்து மேன்மை கிறைந்து மேலான கதியை மனிதர் அடைய நேர்கின்றனர். கற்றதும் கேட் டதும்தானே ஏதுக் காகக் கடபடம் என்று உருட்டதற்கோ? கல்லால் எம்மான் குற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு குணம்.குறியற்று இன்பநிட்டை கூட அன்றே? (தாயுமானவர்) கல்வி கேள்விகளுக்கு உரிய உண்மையான உயர் பயனேத் தாயுமானவர் இவ்வாறு பரிவோடு உணர்த்தி யுள்ளார். குறித்துள்ள குறிப்பைக் கூர்ந்து உணர்க. கற்றல் கேட்டல்களால் அறிவு தெளிந்து வருகிறது: அவற்றை இழந்தவர் அறிவிலிகளாய் இழிந்து ஒழி கின்ருர். அறிவுக்கு உரிய மூலங்கள் அறிய வங்தன. கற்ருனும் கற்ருர்வாய்க் கேட்டானும் அல்லாதார் தெற்ற உணரார் பொருள்களே-எற்றே அறிவில்லான் மெய்த்தலேப் பாடு பிறிதில்லை நா வற்கீழ்ப் பெற்ற கனி. (பழமொழி 138) கற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர்-தெற்ற அறைகல் அருவி அனிமலே நாட! நிறைகுடம் நீர்தளும்பல் இல். (பழமொழி 243} நல்லார் வாய்க் கேள்வி யில்லாதார் நயமான அறி வில்லாதவராய்த் தம்மையே புகழ்ந்து தருக்கித்திரிவர்: நல்ல அறிவுடையவர் அமைதியாய் அடங்கி எவ்வழியும் செவ்வியரா யிருப்பர் என இவை உரைத்துள்ளன. பித்தரா னவர்க்குமனப் பித்து ஒழியும்; பீடைகள் போம்; சித்தரான வர்காய சித்திமுதல் எய்திடுவார்; பத்தரா னவர் மேலும் பரமஞா னம்பெருகி முத்தரா குவர்பனச மூர்த்திமான் மியம்கேட்பின். (திருக்குற்ருலபுராணம்: