பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22.98 திருக்குறட் குமரேச வெண்பா அல்லாதவன் இழிந்த மிருகமே. அவன் உயிரோடு திரிங் துழல்வதை விட இறந்து ஒழிந்து போவதே நல்லது. செவிச் சுவையை இழந்தவன் புவிச் சுமையே. செவிவழி அறிவொளி சேரின் தேவளுய்ப் புவிவழி உயர் ஒளி பொருந்தி வாழுவன்; செவிவழி உணர்வினை ஒழியின் சிவனே அவிவழி யாக்கியே அழிக்கின் ருனவன். கேள்வி கலனே இழந்தவன் கெட்டழிவதை இது சுட்டியுளது; ஞான ஒளி ஒழியவே ஈன முறுகிறது. அறிவு நலங்கனிந்த சிறந்த கேள்வி மனிதனே உயர்ந்தவனுக்கி யருளுறுகிறது. இத்தகைய கேள்வி கலனே அடையாதவன் மடையயிைழித்து கடையணுகி முன். ஆகவே அவன் பிறப்பு பழி படிந்து இழிவடைந்து பரிதாபமாய்ப் பாழ்படுகின்றது. தவப்பொழி மாரி காப்பத் தடவரைக் கவிகை அன்று கவித்தவன் கோயில் செல்லாக் கால்மரத் தியன்ற காலே; உவப்பினின் அமுதம் ஊறி ஒழுகுமால் சரிதம் கேளாச் செவித்தொளே நச்சு நாகம் செறிவது ஒர் தொ8ள மற்ருமால். (பாகவதம், 2-6) திருமால் சரிதம் கேளாத செவி பாம்பு துழையும் து.ாம்புவளே என்று இது குறித்துளது. செவியின் சுவை உணர்வை இழந்த பொழுதே அந்த மனிதப் பிறவி இழிந்து படுவதை இதில் தெளிந்து கொள்கிருேம். அறிவின் சுவை அதிசய இன்பமாய்த் துதிகொண் டுளது. அது கேள்வியால் கிளர்ந்து தெளிந்து வருகிறது. அதி துகர்ந்து வருபவர் உயர்ந்தவராய்ச் சிற்ங்து திகழ்கின்ருர். துகராதவர் இழிந்தவராய்க் கழிந்து போகின்ருர். சாரம் இழந்தவர் சக்கை யாகின்ருர். ஈனமாய்த் தாழ்ந்து போகாமல் ஞானமாய் வாழ்ந்து கொள். கேள்வி யில்லாதவர் பொல்லாதவ ராய்ப் பு:இல யுறுவர். அவர் இருப்பதினும் இறப்பதே இதமாகிறது. இவ்வுண்மை காந்தாரர்.பால் காணவங்தது.