பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2300 திருக்குறட் குமரேச வெண்பா மன்னவ! மருகாந்தாரம் என்பதோர் தீவின் வாழ்வார் அன்னவர் சதகோடிக்கும் மேலுளார் அவுன ரசியோர் தின்னவே உலக மெல்லாம் தீந்தன எனக்கும் தியார் மின்னுமிழ் கணேயை வெய்யோர் மேற்செலவிடுதி என்ருன். நேடிநூல் தெரிந்து ளோர்க்கும் உணர்விற்கும் நிமிர நின்ருேன் கோடிநூ ருய திய அவுனரைக் குலங்க ளோடும் ஒடிநூறு என்று விட்டான் ஓரிமை ஒடுங்கா முன்னம் பாடி நூருக நூறி மீண்டதப் பகழித் தெய்வம். (2} ஆய்வினே யுடையர் ஆகி அறம்பிழை யாதார்க் கெல்லாம் ஏய்வன நலனே அன்றி இறுதிவந் தடைவ துண்டோ? மாய்வினை இயற்றி முற்றும் வருணன்மேல் வந்த சீற்றம் தீய்வினை யுடையார் மாட்டே தீங்கினேச் செய்த தன்றே. (3) பாபமே இயற்றி ைைரப் பன்னெடுங் காதம் ஒடித் தூபமே பெருகும் வண்ணம் எரிஎழச் சுட்ட தன்றே தீபமே அனேய ஞானத் திருமறை முனிவன் செப்பும் சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா ! {4} (இராமாயணம் 6-6) காந்தாரர் மாய்ந்து போயுள்ள கிலேமையை இதனுல் ஆய்ந்து அறிந்து கொள்ளுகிருேம். கேள்விப் பயனே இழந்தவர் உள்ளம் தடித்துப் பொல்லாதவராய் ஒங்கி எல்லாரும் இகழ்ந்து வர எள்ளலடைந்து அழிவர் என் பதை இவர் சரிதம் நன்கு தெளிவுறச் செய்தது. உற்ற செவியின் உணர்வு கலம்பெருர் பெற்றவை எல்லாம் பிழை. செவி உணர்வு பேணிச் சிறந்து வாழுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கேள்வி சிறந்த செல்வம். அதனே உவந்து பேண வேண்டும். செவி யுணவுடையவர் தேவர் எனத் திகழ்வர். உள்ளத்தை உயர்த்தி அது உறுதி புரியும். ஊன்றுகோல் போல் உதவி செய்யும். நல்லது கேட்பது நாளும் நலமாம். பேதைமை நீக்கி மேதைமை ஆக்கும். அறிவுநலம் கேளாத செவி அவலமாகும். நுணங்கிய கேள்வியால் வணங்கிய வாய்மையாம். செவிச் சுவை இழந்தவர் செத்தவர் ஆவர். ச.உ-வது கேள்வி முற்றிற்று. 1