பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2302 திருக்குறட் குமரேச வெண்பா வெளியே காட்டில்ை ஒருவனுக்கு வெட்கமும் துக்க மும் நேருகிற மறைவுகளே மறைப்பது மதி நலமாம். அவமானம் நேராமல் எவ்வழியும் செவ்வையா மானத் தைக் காத்து வருபவர் மாட்சி யடைந்து வருகின்ருர். அறுவையால் மறைப்பதும், அறிவால் காப்பதும் அற்றம் என அமைந்தது. உயிர் துயருருமல் காப்பது உயர் அறிவாம். இன்பமே நாடுகின்ற மனிதர் துன்பம் நேராமல் எதையும் ஆழ்ந்து சூழ்ந்து காக்க வுரியர். இரந்தோர் அற்றம் தீர்க்க. (புறம் 158) அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில். (மணிமேகலே 3) அற்றம் இன்மையின் அவலம் நீங்கினர். (சிந்தானி 1764) அற்றம் அறியாச் செற்றச் செய்கை. (பெருங்கதை 2, 19) அற்றம் இதுவென ஒற்றர் காட்டிய. (பெருங்கதை 3, 24) அற்றத் திட்டு ஆற்றறுத்தான் . (கலி 144) அற்றம் இன்றி. (நீலகேசி 892) அற்றம் அற்ற முனிவர். (அருணசலம் 9-1) அற்றம் நோக்கியே. (இராமா, திருஅவ 41) அற்றம் செய்து. (இராமா: அகலி 73) அற்றம் சொல்லினுள். (இராமா, உண்டாட்டு 53 அற்றம்தான் மறைக்குமே. (இராமா, உலா 29) அற்றமில் புகழ். (சூளாமணி, மந்திர 6) அற்றங்கள் பார்த்து. (பெருந்தேவனுர் பாரதம்) அற்றமறு சத்தியம். (ஞானவாசிட்டம்) அற்றம் உணர்த்தி கிற்கும் பொருள்களே இவற்றுள் ஒர்ந்து உணர்க. குற்றம் குறைகள் நேராமல் ஒருவனேப் பாதுகாக்க வ ல் ல து அறிவே, அதனே யுடையவன் இடரின்றி எங்கும் வெற்றி யுடையனப் வி ள ங் கி கிற்கின்ருன். துயர் உருது வாழ்வதே உயர்வாழ்வாம். கருவி என்றது காரிய சாதனமா யுள்ளமை கருதி. செறுவார் = பகைவர். செற்றம் கொண்டு செறுத் துள்ளவர் என்னும் குறிப்பினே யுடையது. உம்மை