பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ மு. க வ ைர உயிர் இனங்களுள் மனித இனம் பலவகை நிலை களிலும் தலே சிறந்துள்ளது. மனம் மொழி மெய்களால் தொழில் புரிந்து எவ்வழியும் எழில் மிகுந்து இந்த இனம் யாண்டும் ஒளி விரிந்து வருகிறது. தனது வாழ்வு நெறி முறையே நடந்து வர வழிமுறையே ஒரு தலைவனைப் பழமைப்பிலிருந்தே கிழமையாய்க் கிளர்ந்து வந்துளது. வீட்டுக்கு ஒரு தலைவன் போல் நாட்டுக்கு அவன் நாயக மாய் நிலவி யாண்டும் நலம் புரிந்து நிற்கிருன். அரசன், இறைவன், மன்னவன், வேந்தன் என இன்னவாறு பல காரணப் பேர்களோடு பூரணமான தலைமையில் அவன் பொலிந்து வந்துள்ளான். மாந்தரைப் பாதுகாக்க நேர்ந்துள்ள அந்த வேந் தன் எத்தகைய உத்தமய்ை எவ்வளவு வித்தக விவேகி யாய் விளங்கி யிருக்க வேண்டும் என்பதை இறைமாட்சி என்னும் அதிகாரத்துள் தேவர் தெளிவா விளக்கியிருக்கிருர். மன்னனும் மக்களும் மதிநலம் தோய்ந்து இம்மை யும் மறுமையும் பெருமையாய் வாழவேண்டிய வழிமுறை களைத் துறைகள்தோறும் உணர்வொளி வீச உரைத்துள் ளார். வாழ்வின் வகைகள் தகவா விளங்கியுள்ளன. மனிதன் அறிவால் உயர்ந்திருக்கிருன்: அந்த அறிவு கல்வியால் ஒளி பெற்று வருகிறது; ஆகவே இளமையிலேயே வளமையாக் கற்றுக் கொள்ளுக; கல்லா மல் கழிந்து போகாதே; சீலமுள்ள மேலோர்களுடைய