பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வு ைட ைம 2305 அவிவேகிக்குப் பாரம் சாத்திரம்; மெய் யறிவிலோர்க்கு அங்கம் பாரம்; தவில்சாந்தி யில்லாதோர்க் குளம்டாரம்; அவாவினர்க்கு ஞானம் பாரம்; செவிதான உருவானள் மனம் புந்தி அகங்காரம் செயல்கள் எல்லாம் குவிபார மாம்சுமடர் சுமைபோலப் புந்திநலம் கூடா தார்க்கே. (ஞானவாசிட்டம்) அறிவு நலம் இல்லாதவருடைய அவல நிலைகளே வசிட்டமுனிவர் இவ்வாறு விளக்கி யிருக்கிருர். இக்கவி யில் மருவியுள்ள பொருள் தயங்களேயும் உணர்வு கிலே களையும் மானச மருமங்களேயும் ஆன்ம தத்துவங்களே பும் உய்த்துணர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். அறிவுடையவன் ஆன்ற மேன்மைகளே அடைகிருன். இவ்வுண்மை அறிவுடை கம்பிபால் அறிய வந்தது. ச ரி த ம் இவன் வழுதி வேந்தர் வழியினன். கலேகள் பல பயின்று தெளிந்தவன். விழுமிய நீர்மைகள் உடையவன். உருவ அழகும் உணர்வின் தெளிவும் இவனிடம் ஒளி மிகுந்திருந்தன. உலகம் உவந்து போற்றிவர இவன் உயர்ந்து வாழ்ந்து வந்தான்; செம்மனத்தான், தண்ணளி யான், செங்கோலான் என யாண்டும் இவன் புகழ்கள் நீண்டு கின்றன. உலகியல் அறிவிலும் கலே பயில் தெளிவிலும் இவன் தலே சிறந்து வி ள ங் கி ைன். பிசிராங்தையார், பொத்தியார் முதலிய புலவர் திலகர் களும் இவனது புலமையையும் நிலைமையும் தலைமையை உபும் வியந்து புகழ்ந்துள்ளனர். இவன் பாடிய பாடல்கள் சில சங்க நூல்களில் வந்துள்ளன. மக்கட் பேற்றின் மாட்சியை நயமா இவன் வரைந்து காட்டி யிருக்கிருன். அந்தக் காட்சியை அயலே காண வருகின்ருேம். 289