பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2308 திருக்குறட் குமரேச வெண்பா நன்மை தீமைகளே நாடி அறிந்து உயிர் துயர் உரு மல் பாதுகாப்பது அறிவே ஆதலால் அதன் நெறி கிய மங்களின் படியே மனத்தை அது அடக்கி யருளுகிறது. அவ்வாறு அடக்காவிடின் எவ்வழியும் அவகேடேயாம். மனம் போன போக்கிலேயே போனல் அந்த மனித வாழ்வு மதிகேடாய் மாண்பிழந்து படும். மதியுள் அடங்கி மனம் நல்லவழியில் சென்ருல் மனிதன் கல்ல. வய்ை ஒளி பெறுகிருன். அது தீய வழியில் பழகின்ை அவன் தீயவனுயிழிந்து யாண்டும் துயர் உறுகிருன். மகான்களாய் உயர்ந்து வருபவர் எவரும் மனத்தை வசப்படுத்தியே எங்கும் மாட்சி யடைந்துள்ளனர். பிறவித் துன்பங்கள் நீங்கிப் பேரின்பம் அடைய நேர்ந்துள்ள பெரியோர்கள் மனத்தை அ ட க் க வே முதலில் மூண்டு முயன்றுள்ளனர். அது வசமால்ை அதிசய சித்தராய்த் துதி மிகப் பெறுகின்ருர், இல்லை யேல் அதன் போக்கை நோக்கி அல்லல் உறுகின்றனர். காடும் கரையும் மனக்குரங்கு கால்விட்டு ஒட அதன்பிறகே ஒடும் தொழிலால் பயனுளதோ? ஒன்ருய்ப் பல வாய் உயிர்க்குயிராய் ஆடும் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற்கு அன்புநிலை தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாரும் செகத்திரே ! அறிவுக்கும் அடங்காமல் மனம் ஒடுகின்ற ஒட் டத்தை உணர்ந்து தாயுமானவர் இவ்வாறு வருக்தி யிருக்கிரு.ர். மனத்தோடு போராடியுளதை அறிகிருேம். மாறிநின்று என்னே மயக்கிடும் வஞ்சப் புலனேந்தின் வழியடைத்து அமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் ! தேறலின் தெளிவே ! சிவபெரு மானே ! திருப்பெருந் துறையுறை சிவனே ! ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே: (திருவாசகம்)