பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2312 திருக்குறட் குமரேச வெண்பா பலா மரங்கள் வேரில் பழுத்திருப்பது பதஞ்சலி முனிவனேத் தங்த நாகலோகத்துக்கு உவந்து உதவ நேர்ந்திருப்பது போலாம் என இது குறித்துள்ளது. சென்றவரைத் தாமாக்கும் தில்லேச்சிற் றம்பலத்து மன்றவரைத் தாமாக்க வல்லவர்யார்-என்றுமிவர் ஆடப் பதஞ்சலியார் ஆக்கினர் என்பிறவி சாடப் பதஞ்சலியார் தாம். (சிதம்பர மும்மனி 2:1) பதம் சலியாமல் என்றும் ஆடும்படி பதஞ்சலியார் பரமனே ஆக்கியுள்ளார் என்னும் இதன் அழகை நோக்கி புணர்க. இவருடைய அறிவும் தவமும் அரிய பேரின்ப நிலைகளே அடைந்திருக்கின்றன. மனத்தைப் பொறி களில் செல்ல விடாமல் அடக்கி நல்ல .ெ ந றி யி ல் செலுத்துபவரே பேரறிவாளராய்ப் பெரு மேன்மை பெறுவர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி பருளினர். விரிவைக் கோயில் புராணத்தில் காண்க. நெறியே ஒழுகிவர கெஞ்சை கடத்தும் அறிவே அறிவாம் அறி. மனம் அடங்கி மதிநலம் பெறுக. 423. உற்றவர்வாய்ச் சொல்லெல்லாம் ஒர்ந்தேன் உருத்திரர் குற்றமறக் கண்டார் குமரேசா-எற்றேனும் (மெய் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (ங்) இ-ள். குமரேசா உருத்திரசன்மர் புலவர்கள் எதிரே மெய்ப் பொருளைத் தேர்ந்து ஏன் உரைத்தார்? எனின், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு என்க. உண்மையை உய்த்து உணர்க என்கிறது.