பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 14 திருக்குறட் குமரேச வெண்பா சுருதி யுத்தி அனுபவம் யூகம் விவேகம் என்பன அறிவின் கிளேகள்: இவை உண்மைப் பொருளே உரிமை யாக உணர வுரியன. பிறர் கூறும் மொழிகளுள் மெயப் மையை ஒர்ந்து கொள்வது தேர்ந்த அறிவுடைமையாம். வாய் என்பதை ஏழனுருபாக் கொள்ளின் யாரிடம் கேட்பினும் என்று பொருள் கூறிக் கொள்ளலாம். ஊகமுள தேல்சிறுவர் உரையும் கொள்க ஒழிந்தது.அயன் உரை செயினும் திரணம் ஒப்ப ஏகவிடு வாய்ஞானம் எளிது தோன்ற இயம்பும்உவ மானமெலாம் ஏக தேச மா கநினே வாயுருவ மற்ற ஞானம் ஆகார மாமுவமைக் கண்டா தென்னும் மூகரனு பவமில்லா விகற்பத் தாலே மொழிகுதர்க்கம் அறிவழிக்கும் முயல வேண்டா. (வாசிட்டம்) யுத்திக்குப் பொருங்தி உண்மையா யிருந்தால் சிறுவர் கூறினும் அவ்வுரையை உவந்துகொள்: பொருத் தம் இல்லாததைப் பிரமதேவன் சொன்னலும் அதைத் துரும்பா இகழ்ந்து தள்ளி விடு என மெய்ப்பொருள் உணர்வை வசிட்டமுனிவர் இராமனிடம் இவ்வாறு: கூறியிருக்கிரு.ர். எவர் எவ்வாறு எதைச் சொல்லினும் அவ்வுரை களுள் உண்மையை ஒர்ந்து கொள் ள வேண்டும். அதுவே உயர்ந்த அறிவாம்; தெளிந்த ஞானமாம். இவ்வுண்மை உருத்திரசன்மர்பால் உணர வந்தது. ச ரி த ம் இவர் மதுரையம் பதியினர். வணிகர் மரபினர். தந்தை பெயர் தனபதி. தாய் சாலினி. முருகப் பெரு மான் திருவருளால் பிறந்த இவர் யாரோடும் யாதும் பேசாமல் மோனமாயிருந்தார். எல்லாக் கலைகளேயும் ஒதாது உணர்ந்தமையால் உயர்ந்த மேதையாய் இவர் ஒளி மிகுந்து நின்ருர். இவருடைய கிலேமை தலைமை க&ளச் சங்கப் புலவர்கள் அறிய நேர்க்தார். இறைவன்