பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 18 திருக்குறட் குமரேச வெண்பா சொல்லுங்கால் சொல்லின் பயன்காணும் தான்பிறர் சொல்லிய சொல்லே வெலச்சொல்லும்; பல்லார் பழித்தசொல் தீண்டாமல் சொல்லும்; விழுத்தக்க கேட்டார்க்கு இனியனைச் சொல்லானேல் பூக்குழலாய்: நல்வயல் ஊரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது. (தகடுர்) சொல்வலியின் மாட்சியும், பொருளறிவின் காட்சி யும் இல்லாதவனே மணப்பதினும் தணப்பது நல்லது என ஒரு தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறியுள் வளாள். துண்மையான பொருளுணர்வும், எண்மையான மொழி யறிவும் எவ்வளவு மேன்மையுடையன என்பதை இந்தப் பெண்மை மொழி திண்மையாய் வெளிப் படுத்தி உண்மையைத் துலக்கி யுTெது. நூல்பல கற்றேன் ஏனும் பொருள் நுனித் தறியான் என்னில் மாலொடு வாளா கத்தும் மானிறக் காகம் போல்வன்; ஏல்வறக் கற்ற நூலின் பொருள் தெரிந் திரு நூல் சொன்ன சீலமே ஒழுகு கின் ருேன் சிவனடி நீழல் சேர்வான். (கூர் மபுராணம் 2-14) நுண்பொருள் காணுதவன் அறிவும் கல்வியும் வீனம் என்னும் இதனே ஈண்டு எண்ணி யுணர வேண்டும். நூலறிவின் பயன் வாலறிவனே மருவலே. எதையும் பிறர்க்கு எளிதாக விளக்கி எவ்வகைப் பொருளேயும் தெளிவாக அறிவுடையார் உணர்ந்து கொள்வர். அவரது உணர்வொளி உயர்புகழுடையதாம். இவ்வுண்மைகள் படிக்காசர் பாலும், சிவப்பிரகாச ரிடமும் தெளிவாய் நன்கு தெரிய நின்றன. ச ரி த ம் படிக்காசுப் புலவர் தொண்டை மண்டலத்திலே தென்களங்தை என்னும் ஊரிலே பிறந்தவர். சிறந்த புலமையும் நிறைந்த சீலமும் உடையவர். உலக கிலே களைப் பலவகையிலும் தெரிந்து உளவுறுதி பூண்டு