பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அ றி வ ைட ைம 2325 நண்பராய்த் தழுவியபின் விழுமியோர் வேறுபடார். இவ்வுண்மை சீனக்கர் பால் தெரிய நின்றது. ச ரி த ம் இவர சோழ நாட்டிலே அரசை என்னும் ஊரில் இருந்தவர். வேளாளர் குலத்தினர். சிறந்த செல்வமும் நிறைந்த கல்வியும் உடையவர். சோழ மன்னனுக்கு மந்திரியாய் இவர் மருவி யிருந்தார். அரசுக்கும் காட்டுக் கும் நலம் பல செய்து வந்தார். யாவர்க்கும் இனிய நீர்மையரான இவர் பால் எல்லாரும் பிரியம் மீதுார்ந்து கின் ருர். நல்ல கல்வி யறிவுடைய இவர் பொய்யா மொழிப் புலவர் மீது பேரன்பு பூண்டிருந்தார். மதிநல முடைய அவரை அடிக்கடி அழைத்து உபசரித்து வைத்து அவரது அறிவுரைகளேக் கேட்டு மகிழ்ந்தார். ஒரு நாள் இரவு இருவரும் ஒரு மஞ்சத்தில் அமர்ந்து உல்லாசமாய் உரையாடிக் கொண்டிருந்தார். அவ்வமையம் அரச காரியமாய் முதலியார் வெளியே போர்ை. புலவர் அங்த அமளியில் அயர்ந்து உறங்கினர். சிறிது பொழுது கழிந்து இவருடைய மனேவி அங்கே வந்தாள். தனது நாயகன் என்றே கருதி அவர் அருகே சார்ந்து துயின் ருள். வேலே நிமித்தம் வெளியே போயிருந்த இவர் மீண்டு வந்தார். கிலேமையை நேரே கண்டார். இனக் தெரியாமல் இது நிகழ்ந்துள்ளதென்று உணர்ந்தார். பழி சிறிதும் இல்லாத அந்த இருவருக்கும் இடையே புகுந்து இவர் இனிது உறங்கினர். விடியுமுன் ஒருவர் பின் ஒருவர் எழுந்தார். மனேவியாரும் புலவரும் மனம் பதைத்து நொந்தார். அந்த இருவரையும் இனிது தேற்றி இந்தப் பெருங்தகை யாதும் மாறுபடாமல் பண்டு போலவே உரிமை பூண்டிருந்தார். இவரது அறிவுடை மையையும் அன்புடைமையையும் கினேந்து கினேங்து புலவர் உள்ளம் உருகினர். இந்த நிகழ்ச்சியை அரச னும் அறிந்தான்: புலவரை அழைத்தான்: உண்மையை உசாவினன். உற்றதை முற்றும் கொற்றவன் அறிக் து தெளிய இவர் குணமுடன் வரைந்து உரைத்தார்.