பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

戈32& திருக்குறட் குமரேச வெண்பா உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். (குறள் 140) உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (குறள் 850) உலகத்தோடு ஒத்து நடப்பதே அறிவாம்; அத ைேடு மாறுபாடாய் வேறுபடுவது மடமையான பேய்த் தனமாம் என இவை உணர்த்தி யுள்ளன. ஒழுக்கம் உடைமை, புல்லறிவாண்மை என்னும் இரண்டு அதி காரங்களின் முடிவில் இப்படி முடித்திருக்கின்ருர். திரளான மனித இனத்தின் அதிசய ஆற்றலேயும், உலக இயக்கத்தின் கிலேமைகளேயும் தேவர் தலைமை யாக எண்ணி யுள்ளார. அங்த உண்மைகளே நுண்மை பாக ஈண்டு உணர்ந்து தெளிந்து கொள்ளுகிருேம், எல்லாம் வல்ல இறைவன் இயக்கத்தின் படியே யாவும் இயங்குகின்றன என்று தெளிந்து தன் கால கிலேயை உணர்ந்து ஞாலத்தோடு ஒத்து வாழுபவனே உயர்ந்த மதிமானப் ஒளி மிகுந்து திகழ்கின்ருன். எவரெவர் எத்திறத்தர் அத்திறத்த ராய் நின்று அவரவருக்கு ஆவன கூறி-எவரெவர்க்கும் உப்பாலாட் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான் எப்டாலும் நிற்ப தென. (நீதிநெறி 98) தெளிந்த அறிவுடைய ஆசிரியன் கிலேயை இது காட்டியுளது. பாடு அறிந்து ஒழுகுவதே பண்பாம். உலகம் முழுவதும் ஆளும் தலைமையுடையயிைனும் தன் காலத்தில் மாந்தர்கள் எப்படி வாழ்ந்து வருவார் களோ, அப்படி ஒர்ந்து நடந்து உரிமை கூர் மீது வருவது இராச தந்திர முடைய வேந்தன் கடமையாம். அரிய கலைஞானியாய்த் தலே சிறந்திருந்தாலும் உலக கிலேயை உணர்ந்தே உயர்ந்தோர் ஒழுகிவருவர். இவ் வுண்மை இராமரிடம் தெரிய கின்றது.