பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவு ைட ைம 233 É 427. ஆவதனை முன் மால் அறிந்துசெய்தார் ஏனிலங்கைக் கோவதனைத் தேரான் குமரேசா!-மேவும் அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். (எ) இ-ள். குமரேசா ! ஆவதை முன் அறிந்து திருமால் செய் தார்: இராவணன் ஏன் அதனை அறியாமல் போன்ை ? ஏனின், அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அ.து அறிகல்லாதவர் என்க. அறிவும் மூடமும் அறிய வந்தன. பின் வருவதை முன்னுற எண்ணி அறிவார் அறி வுடையார் அறிவில்லாதவர் அவ்வாறு அதனே அறிய மாட்டார். ஆவதை அறியார் அறிவற்ற அவகேடரே. அறிவு ஒளியுடையது ஆதலால் அதனையுடையவர் எதையும் விரைந்து தெளிவாக உணர்ந்து கொள்ளு கின்ருர். அந்த ஒளியில்லாதவர் உள்ளம் இருள் மண்டி புள்ளமையால் யாதும் கடிது தெரியாது மூடமாய் கிற்கின்ருர், மூடகிலே பீடையான புலேயாம். கண் உடையவன் துரவருவதை நேரே கண்டு கொள்கிருன்; கண் இல்லாத குருடன் அவ்வாறு காண மாட்டான் கிட்டவங்து தொட்டால் அறிந்து கொள்ளு வான். அது போல் அறிவுடையவன் வருவதை ஒர்ந்து அறிகிருன்: அறிவில்லாதவன் வந்தபின் அறிய நேர் கின்ருன். அவ்வாறு அறியாதவனும் உளன். ஆவதை அறிவான் அறிஞன், ஆனபின் தெரிவான் அறிவிலன். யாவும் அறியான் முழு மூடன். எட்ட வருவ தெதிரறிந்து காணும்கண் எட்டி அறிவார் இயலறிவார்-முட்டவே பட்டால் அறிவர் படுமூடர்; பட்டழுந்தித் தொட்டால் அறியும் துவக்கு. அறிவுடைய யூகிகளேயும் அறிவில்லாத மூடர்களே பும் இக்கவி சுவையாய் விளக்கியுளது. உவமானங்கள்