பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து நான்காவது அதிகாரம் கு ற் ற ம் க டி த ல். அ.தாவது குற்றங்களே நீக்கி அரசன் குணமுடன் வாழுதல். இழிவான பிழைகளைக் காணவும் கடியவும் வல்லது அறிவே ஆதலால் அறிவுடைமையின் பின் இ.து அமைந்து நின்றது. நல்ல அறிவு நன்றே புரிகிறது. 431. வென்றி நெடுஞ்செழியன் வெம்பிழைக ளின்றியேன் குன்றமென நின்ருன் குமரேசா-என்றும் செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. (க) இ-ள். குமரேசா! நம்பி நெடுஞ்செழியன் பிழைகள் நீங்கி ஏன் விழுமிய திருவனுய் விளங்கி யிருந்தான்? எனின், செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து என்க. குற்றங்கள் சில கூர்ந்து உணர வந்தன. தருக்கும் கோபமும் கீழ்மையும் இல்லாதவரது செல்வம் வளமாய் ேம .ே ல | ங் கி விரிந்து வரும். நீர்மையது. நிறைந்த ஆக்கம் நீர்மையால் உறுகிறது. செருக்கு = அகங்காரத்தால் வருகிற நிமிர்ச்சி. சினம் = ஆணவத்தால் மூண்டெழுகின்ற சீற்றம். சிறுமை = இழிவான வழியில் பழகிவரும் புன்ை LD. அடக்கம் அமைதி பெருமை என்னும் மூன்றுக்கும் இவை முறையே நேர் மாருனவை. அவை குணநலன் களாய் மணம் பெற்று உயர்ந்துள்ளன. இவை குற்றங் களாய் இழிந்து தாழ்ந்திருக்கின்றன. அவற்றையுடை யார் மேலோராய் மேன்மையுற்று உயர்ந்திருக்கின்ற -னர். இவற்றையுடையார் கீழோராய் இழிந்து தாழ்ந்து: