பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.58 திருக்குறட் குமரேச வெண்பா குத் துயர் புரிகிற உட்பகை என்று உரைத்துள்ளனர். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவை இங்கே நன்கு அறிய வுரியன. மதம்=செருக்கு: குரோதம்= சினம்: காமம் = சிறுமை; உலோபம்= இவறல்; மாற்சரியம்=மாண் பிறந்த மானம்; மோகம் = மான உவகை. புறப் பகைகளை அடக்கி நாட்டை ஆளவுரிய அரசன் இந்த உட்பகைகளை ஒடுக்கிய அளவே ஒளிபெற்று நிற்கிருன். இனிவுகள் நீங்கவே ஒளிகள் ஓங்குகின்றன. அல்லவைகளே நீக்கி ந ல் ல ைவ க ளே ஆக்கிக் கொள்ளுவது எல்லாருக்கும் உரிமையே யாயினும் தலைமை பற்றி வேந்தனுக்குக் கடமை என்று விளக்கி யருளினர். மாந்தரும் நலம் மருவி வர வேண்டும். இறைக்கு ஏதம் என்றது அவனுடைய ஆட்சியும் மாட்சியும் ஏதம் இன்றி இசை பெற்று வரப் போதித்த படியாம். இவறல் முதலிய பிழைகள் நீங்கி ஈதல் முதலிய வழிகளில் பழகி ஒளிமிகுந்து ஓங்கி வருக. உலோப முடையவன் இழிபழி அடைவான். இ.து இளவெளி மானிடம் தெரிய வங்தது. ச ரி த ம் இவன் ஒரு குறுநில மன்னன். தன் முன்னவன் இறந்து போனமையால் இவன் மன்னவன் ஆயின்ை. அந்த அண்ணன் இனிய குணநீர்மையன்: பெருங் கொடையாளி. புலவர்கள் பால் பேரன் புடையவன். பெருஞ்சித்திரளுர் என்னும் புலவர் பெருமானுக்குப் பெரும் .ெ பாருள் தர விரும்பி யிருந்தான்: அவன் இறந்து போக நேர்ந்த போது புலவரைப் போற்றியரு ளுக என்று புகன்று மாண்டான். அந்த வள்ளலோடு பிறந்திருந்தும் இவன் உள்ளம் புன்மையா யிழிந்திருங் தான். அவ்வுபகாரியின் பிரிவை அறிந்து புலவர் பெரி தும் வருந்தினர். சில காலம் கழித்து இவனிடம் வந்தார்.