பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空368 திருக்குறட் குமரேச வெண்பா நேர்ந்துள்ள கிலேமைகளே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். மேலான உயர்ந்த பதவியை இழந்து தன் குற்றத்தில்ை வருணன் கீழா யிழிந்துள்ளான். பகைவர் எவரும் செய்ய முடியாத கொடிய துன்பத்தை ஒரு சிறு குற்றம் செய்து விட்டது. அழிதுயரங்களைத் தருகின்ற பகை குற்றமே. ஆதலால் அது நேராவண் னம் எவ்வழியும் கவனமாகத் தன்னே ஒருவன் காத்துக் கொள்ள வேண்டும்; அங்கனம் காவானுயின் ஒவாத்துய மே! என்பதை உலகம் காண இவன் காட்டி யுள்ளான். குற்றம் படியாமல் கூர்ந்துகீ வாழ்ந்துவரின் கற்றவ வாழ்வாம் அது. தப்பின்றிச் செப்பமாய் வாழ்க. - = - 485. கண்டு திரிபுரர் முன் காவாமை யாலழிவு கொண்டுநொந்தார் என்னே குமரேசா-மண்டி வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்து று போலக் கெடும். (டு) இ-ள். குமரேசா! முன் அறிந்து காவாத திரிபுரர் ஏன் பின்பு ஒருங்கே அழித்தார்? எனின், வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக் கெடும் என்க. கருத்தோடு கவனமாய்க் காக்க வுரியதை இது காட்டியுளது, காப்பும் வாழ்வும் காண வந்தன. இடர் எய்து முன்னே எதிரறிந்து பாது காவாத வனது வாழ்க்கை நெருப்பு எதிரே பட்ட வைக்கோல் பொதி போல் விரைந்து அழிந்து படும். வைத்துாறு = வைக்கோலின குவியல். நெல்லேப் பிரித்து எடுத்துக் கொண்ட பின் தனியே படப்பாக் குவித்து வைக்கப்படுவது வை என வந்தது.