பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் ற ம் க டி த ல் 2373. குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற் பின் இறைக்கு என் குற்றம் ஆகும் என்க. குற்றம் ஒழியும் வழி உணர வங்தது. தனது குற்றத்தை நீக்கிப் பிறருடைய குற்றங்களே நோக்க வல்லயிைன் அந்த அரசனுக்கு யாதொரு வருமுன்னர்க் கா! என்று முன்னம் கூறினர்; இதில் உன்னிடமுள்ள குற்றத்தை முன்னுற நீக்குக என் கின்ருர். யாண்டும் பிழை புகாமல் ஆள்பவனே அரசம்ை. தன் என்றது தனியே தலைமையாயிருந்து அரசு புரிந்து வரும் மன்னனே. தான் குற்றம் இன்றித் திருந்தி யிருந்த அளவு தான் அவன் குணவாய்ைச் சிறந்து உயர்ந்து எவ்வழியும் வெற்றி வீறுடன் விளங்குகிருன். தான் திருந்தாதவன் பிறரைத் திருத்த முயல்வது விருத்தமாம்; ஆகவே தனது திருத்தத்தை முதலில் அரசனுக்குக் குறித்தருளிர்ை. உள்ளம் புனிதமாய்த் திருந்திய உரவோன் எதிரே உலகம் தானகவே திருந்தி வருகிறது. மாசு அற்றவன் தேசுற்றுத் திகழ்கின்ருன். குற்றங்களும் குறைகளும் மனிதனிடம் இயல்பாய் மருவியுள்ளன. சுற்றிய சூழல்களாலும் பற்றிய பழக்க வழக்கங்களாலும் மனிதன் உருவாகி வருகிருன். அறி யாமையால் மருவி வருகிற பிழைகளே அறிவின் தெளி வால் அரசன் ஒழித்து ஒழுக வேண்டும். படிங்த தவறு. களே முடிந்த வரையும் நீக்குவது முடி மன்னன் கடமை யாம். வழுவறப் புரிபவன் விழுமியோ கிைருன். நீக்கி என்றது நீக்கவுரிய மாசுகளே நோக்கி வந்தது. நீங்காமல் இயல்பாய் நின்ற குற்றங்களும் பாங்காயப் வந்து பற்றிய குறைகளும் ஒழிந்த அளவு தான் அரசன் தெளிந்த குணவாய்ைச் சிறந்து உயர்ந்து திகழ்கிருன். போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லாக்கள் சோகம் படுசூதே சொல்வன்மை-வேகக் கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின் அடுங்க.தமில் ஏனே அரசு. (1)