பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2376 திருக்குறட் குமரேச வெண்பா பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி-மருந்தின் தனியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப! பினியி டழித்து விடும். (பழமொழி 355) பழி என்னும் பொல்லாத பிணி யாதும் பற்ருமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதே மன்னனுக்கு விழுமிய நன்மையாம் என இது விளக்கியுள்ளது. குற்றம் புரியா திருந்துபிறர் குற்றம் களைக! சிறிதேனும் குற்றம் புரியின் சிற்றெரிவைக் குவையை அழிக்கு மாறேபோல் பற்றும்பெருவாழ் வினை அழிக்கும் பகைவர்க்கு ஆக்கம் மிகப்பெருக்கும் முற்றும் பெருநோய் உழப்பிக்கும் முனியா ரானும் முனிவிக்கும். (விநாயகபுராணம்) துயர் நேராமல் அரசன் உயர்வாய் வாழ வேண்டு மால்ை அவன் இன்ன வகையில் இனிது ஒழுக வேண்டும் என்பதை இது தயமா யுணர்த்தி யுளது. குற்றம் நீக்கிக் குணம் ஆக்கி வரும் வேந்த இன மாந்தர் யாவரும் மகிழ்ந்து புகழ்ந்து போற்றி வருவர். இவ்வுண்மை குலசேகரன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் குலசேகர பாண்டியன் என்னும் இம்மன்னன் மதுரை யிலிருந்து மாட்சிமையாய் ஆட்சி புரிந்தான். நீதியும் வீரமும் நிறையும் பொறையும் இவனிடம் நிறைங் திருந்தன. வஞ்சனே தீவினை மருவா நெஞ்சினன். மெய்யே புகலும் துய்ய நாவினன். உலக வுயிர்களேத் தன் உயிர் போல் பேணி வந்த இவ்வேந்தன் ஒரு நாள் இரவு மாறுவேடம் தரித்துத் தனியே நகரின் இயல்பை நாடி வந்தான். ஒரு மறையவன் மனேயருகே வருங்கால் இவனது பாதுகாப்பின் நீதியைக் குறித்து உள்ளே உரைகள் நிகழ்ந்தன. காசி யாத்திரை போக விரும்பிய கீரக்தை என்னும் ஒரு வேதியன் தன்னைப் பிரிந்து தனியே இருக்க அஞ்சிய தனது இள மனேவியை இனிது