பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.80 திருக்குறட் குமரேச வெண்பா செயல் இயல்கள் தெரிய வந்தன. செய்ய வுரிய கடமைகளேச் செய்யாமல் இழிங் துள்ள உலோபியின் செல்வம் உயர்வின்றி அழிந்து ஒழியும். இவறியான் என்றது உலோபியை. இவறல் உலோ பம் ஆதலால் அதனேயுடையவன் இவறியான் என நேர்க் தான். பொருள் மேல் பேராசை கொண்டு மருள் மண்டி கிற்பவன் என்பது இப்பெயரால் தெரிய வந்தது. உய்தல் என்பது உயல் என கின்றது. அல்லல் நீங்கி நல்ல கதியில் மேல் நோக்கிச் செல்வது உய்த லாம். அந்தத் தலைமையான கிலேமையை இவறியான் செல்வம் அடையாமல் தவறிவிடுகிறது. செல்வம் கெடும் என்றது அதனையுடைய உலோபி யின் மதிகேட்டை மறுகிக் குறித்தது. நல்ல பொருள் புல்லன் மருளால் புலேயாயிழிந்து கழிந்து போகின்றது. இம்மைக்கு உரிய இன்பங்களே அனுபவிக்கவும், மறுமைக்கு உரிய தருமங்களேச் செய்து கொள்ளவுமே செல்வம் உரிமையாய் அமைந்துள்ளது. அந்த நல்ல உரிமைகளே நயமாய்ச் செய்து கொள்ளாமல் பொல் லாத உலோபி புலேயாய் இழந்து விடுகிருன். விடவே செல்வமும் சீரழிந்தது; அவனும் இருமையும் இழந்து சிறுமை யடைந்து இழிந்து கழிந்து ஒழிந்து போகிருன். உண்ணு ன் ஒளி நிருன் ஒங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களேயான்-கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்டானேல் அஆ இழந்தான் என் றெண்ணப் படும். (நாலடி 9) உலோபியின் இழிவான கிலேகளேயும், அவனுடைய பொருள் அழிந்து ஒழியும் புலேகளேயும் ஒரு தமிழ் முனி வர் இவ்வாறு பரிதாபமாய் விளக்கி யுள்ளார். அ! ஆ! இழந்தான் என்ற இரக்கம் மீதுார்ங் தெழுந்த தொனிக் குறிப்பை துணித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.