பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2382 திருக்குறட் குமரேச வெண்பா தக்கதைச் செய்யாதவர் தகாதவரா யிழிகின்ருர். இது மூவன் பால் அறிய நின்றது. ச ரி த ம் இவன் ஒரு குறுகில மன்னன். கொங்கு நாட்டினன். நீர் வளமும் நிலவளமும் வாய்ந்த உயர்ந்த விளைபுலங் களும் சிறந்த செல்வ வளங்களும் இவனிடம் நிறைங் திருந்தன. இருந்தும் ஈந்து உவந்து வரும் இன்ப நலன் களே இவன் இழந்து நின்ருன். நல்ல உபகாரி போல் வெளியே உல்லாசமாய்ப் பேசுவான்; உள்ளே பொருள் மேல் பேராசை மண்டி மருள் கொண்டிருந்தமையால் உதவியாளய்ை உயரவில்லை. த ன் கொண்டதை முதலே வாய் விடினும் தன் முதலே இவன் கைவிடான் என்று வையம் வசை கூற நசையாய் வாழ்ந்து வந்தான். இவனது நிலைமையைச் சரியாகத் தெரியாமல் பெருக் தலச்சாத்தனர் என்னும் புலவர் திலகர் பரிசில் கருதி இவன் பால் வந்தார். அந்தப் பெரியவரது மகிமையை உணர்ந்து மரியாதையுடன் மதித்துப் போற்ருமல் இவன் மறைந்திருந்தான். அவர் உள்ளம் வருக்திர்ை: பரிந்து பாடி அயலே விரைந்து போர்ை. அன்று இவனே நோக்கி அவர் பாடிய பாட்டுள் ஒரு பகுதி அருகே வருகிறது. மருவியுள்ள கிலேமையைக் கருதி உணர்க.

  • பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப் பெருது பெயரும் புள்ளினம் போல நின் நசைதர வந்துநின் இசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர் கோ? வாள் மேம் படுந! ஈயா பாயினும் இரங்குவேன் அல்லேன்; நோயிலே யாகுமதி பெரும !’’ (புறம் 209)

"மூவனே! பழம் பெற விரும்பிப் பறந்து வந்த ஒரு பறவை தான் கருதி வந்த மரத்தில் கனி யில்லேயால்ை எவ்வாறு அது மறுகி மீளுமோ அவ்வாறே உன்பால் அன்போடு வந்த நான் துன் போடு போகின்றேன்; நீ சுக மாய் வாழ்ந்திரு!’ என்று உள்ளம் கனன்று குறிப்போடு