பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.90 திருக்குறட் குமரேச வெண்பா தானே தன்னே வியந்து கொள்வது தவறு; தனது அருமையை உணர்ந்து பெரியோர்கள் புகழ்ந்து சொல் வதே பெருமையாம் என இது குறித்துளது. தனக்கு நேர்கிற சிறுமையை உணராமையால் தன்னே வியந்து புகழ்ந்து வீணே இழிந்து படுகிருன். உன்பால் உறுமுயர்வை ஒர்ந்துபிறர் பாராட்டின் இன்பாம்நீ சொன்னுல் இழிவாமே-பொன் புனேந்த தன்முலேயைத் தன்கையால் தான்வருடின் ஒர்மங்கைக்கு உண்மலியின் புண்டோ வுணர். (தருமதி.பிகை) தற்புகழ்ச்சி இழிவாம் என இது உணர்த்தியுளது. இதில் வங்துள்ள உவமை நயத்தை உய்த்து நோக்கிப் பொருள் கிலேகளே ஊன்றி உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். சடமதைக் கழுவ வுன்னிச் சகதியில் தோய்தல் போலும் சுடரினேத் துரண்ட வேண்டி ஊதியே தொலேத்தல் போலும் மடமையால் தன்னைத் தானே புகழுவோன் வசைகள் எல்லாம் புடவியே எடுத்து உரைக்கப் பூணுவன் நிந்தை பம்மா! (1): தற்புகழ் வோன்தனைப் பழிக்கும் தாரணிை; சொற்புகழ் விரும்பிடான் தனேத்து தித்திடும்; நற்புகழ் பெறுவழி நன்னடக்கையோடு அற்பமும் தற்புக ழாமை யாகுமே. (2} (நீதிநூல்) தன் இன வியப்பதால் விளேயும் இழிவுகளே இன்ன வாறு நூல்கள் பல நன்னயமாக் கூறியுள்ளன. தன்னே வியவாதவனே எங்கும் வியனப் விளங்குகின்ருன். கன்றி பயவா வினை என்றது தீமை பயக்கும் செயலே. தீவினையை நயந்தால் எவ்வழியும் துன்பமே வரும் ஆதலால் கயவற்க என நயமா யருளிர்ை. தன்னை வியந்து தருக்கித் தீமையை நயங்து செருக் கிப் புரிபவன் இன்னலு முந்து இழிந்து அழிந்து படுவான். இது சடாகரன் பா ல் தெரிய நின்றது.