பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.94 திருக்குறட் குமரேச வெண்பா வேந்தனு க்கு மேன்மையான நன்மையாம். காதல்த்த பொருள் கை கூடும் வரையும் அயல் அறியா வகை அதனே ஆதரித்து வருவது அரிய பெரிய வினேயாண்மை. ஆதலால் அ.து ஈண்டு உரிமையாய் நன்கு உணர வந்தது. கருமத்தின் மருமம் காப்பின் தருமமாயுளது. இராச காரியம் பரம ரகசியம் என்பது முதுமொழி. குற்றங்கள் நேராமல் தன்னேயும் தன் காட்டையும் காக்கவுரிய கொற்றவன் முன்னதாகப் பகைவரையே உற்று நோக்கி ஊறுகள் ஊராமல் ஆற்றுகின்ருன். கோதை வேல் நம்பிக் கல்லதை இப்பொருள் யாதும் கூறன்மின்! யாரையும் தேறன்மின்! ஏதம் இன்ன ன இன்னனம் எய்தலால் பேதை பாரொடும் பெண்ணுெடும் பேசன்மின்: (1) பகைவர் உள்ள மும் பாம்பின் படர்ச்சியும் வகைகொள் மேகலே மங்கையர் நெஞ்சமும் மிகைசெல் மேகத்து மின்னுஞ் செந்நில்லலா புகைசெய் வேலிரீைர்! போற்றுபு சென்மினே. (2) (சீவகசிந்தாமணி) சிவக மன்னன் தாய் இன்னவாறு கூறியுள்ளாள். தான் குறித்ததை யாரும் அறியாதபடி குறிக்கோளோடு நடத்த வேண்டும் என்று நயமா யுரைத்திருக்கிருள். பேதையர் பெண்கள் பகைவர் என்னும் இவர்களுடைய மன நிலைகளே எடுத்துக் காட்டி அரச கருமங்களே மரும மாய்ப் பேணி வரும்படி வேண்டி யிருப்பது ஈண்டு விகய விவேகமாய் இனிது விளங்கி கிற்கின்றது. ஏதம் எய்தாமல் தன்னேக் காத்து வருகிற மன்னன் ஏதிலரை ஏதிலராக்கி ய | ண் டு ம் இசை பெற்று: வருகிருன். வினேயின் அடக்கம் வெற்றியின் விளக்கம், எதை எதை எங்த எந்த வகையில் காத்து வச வேண்டுமோ அதை அதை அந்த அந்த வகையில் காத்து. வருபவனே கண்ணியமான காவலன் ஆகின்ருன். அஷ்