பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ン அறிவுரைகளே ஆர்வத்துடன் கேள்; சிறந்த அறிவுடைய ய்ை உயர்ந்து நில்; குற்றங்கள் யாதும் படியாமல் பாது காத்துக் குணங்களேயே எவ்வழியும் பழகிச் செவ்வியை யுயர்க; பெரியாரைப் பேணித் துணைக்கொண்டு பெரு ந் தகையாளனுய் வாழ்க; சிறியாரை எவ்வகையிலும் யாதும் சேராமல் விலகி விடுக. எதையும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெரிந்து வினைசெய்; வலிநிலைகளே உணர்ந்து, காலம் கருதி, இடம் அறிந்து கருமங்களின் மருமங்களை ஒர்ந்து யாண்டும் தருமங்கள் சார்ந்து வரக் காரியங்களேச் செய்து சிரியராய்ச்சிறந்து வாழ்ந்து வருகஎன்னும் இன்னவாருன உணர்வு நலங்கள் நன்னயமாய் இதில் ஒளி விசியுள்ளன. உண்மை தெளிக: செம்மையாய் வாழ்க நீதி மன்னர் நெறிமுறை ஆளுக; ஒ தி மாந்தர் உண வொளி ஒங்குக; கே: தி லா த குனங்கள் குல வுக; ஆதி தேவன் அருள் வழி சூழ்கவே. திருவள்ளுவர் கிலேயம் இங்ங்ணம் மதுரை. செகவீரபாண்டியன் 16–1–64.