பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O68 திருக்குறட் குமரேச வெண்பா ஒழுகி நின்ருர்? எனின், கற்பவை கசடு அறக் கற்க: கற்றபின் அதற்குத் தக நிற்க என்க. கல்வியின் நயனும் பயனும் காண வந்தன. கற்றற்கு உரிய விழுமிய நூல்களே வழுவறக் கற்றுக் கொள்க; பின்பு அதன்படி நலமாய் ஒழுகி உயர்க. இரண்டு போத&னகள் ஈண்டு திரண்டு எழுந்துள் ளன. இவற்றைச் சாதனே செய்து கொள்பவர் வேதனை கள் நீங்கி விழுமியராய் விளங்கி வருவர். கல், கில் என்று கடிந்து சொல்லாமல் கற்க கிற்க! என மரியாதை மருவிய வியங்கோளால் விளம்பியருளி ர்ை. பரிவு கூர்ந்து அறிவு கூறியுள்ள அருமை கருதி யுணர வுரியது. கல்லுதல் என்னும் வினையடியாகப் பிறந்து கல்வி என்னும் பேர் வந்துளது. கல்லுதல் = தோண்டுதல். உள்ளத்திலிருந்து ஊன்றி அகழ்ந்து வர ஆன்ற கல்வி வெளியே தெளிவாய் அமைந்து வருகிறது. கற்க என்று முதலில் கட்டளே யிட்டார். எதைக் கற்பது? எப்படிக் கற்பது? என்னும் வினக்களே எதிர் நோக்கி விடைகள் வந்துள்ளன. மானச மருமங்கள் மதி நலம் சுரங்து விதிமுறையே சிறந்து திகழ்கின்றன. கற்பவை என்றது கற்கத் தக்க நல்ல நூல்களே. பலவகை கிலேகளில் நூல்கள் பரந்து விரிந்து உள் ளமையால் பன்மையில் குறித்தார். நயமான நல்ல நூல்களே நாடிப் பயிலுக எனப் பயிற்சியின் உயர்ச்சி யை உணர்த்தினர். சார்ந்து பயின்ற படியே உயிர்கள் நேர்ந்து வருதலால் நல்ல சார்புகளே நயமாக் காட்டினர். கசடு = குற்றம்: குறை, வழு: பிழை. அற= நீங்க. குற்றம் அற்று ஒழிய நன்கு கற்ற பொழுதுதான் அக் கல்வி குணம் உடையதாய் மணம் அடைகிறது.