பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 207.5 அறிவுக் கலைகளைத் தெளிவாக அறிதற்கு இயலும் எண்ணும் விழிகள் போல் விளங்கி எவ்வழியும் ஒளி செய்து நிற்றலால் இவை கண்கள் என நேர்ந்தன. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். எண் எழுத்து இகழேல். ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். ஏரணம் காண்என்பர் எண்னர்; எழுத்து என்பர் இன்புலவோர்; சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. (திருக்கோவையார்) தருக்க நூலாரை எண்ணர் எனவும், இலக்கணக் கலைஞரை ப் புலவர் எனவும் இதில் குறித்திருத்தலறிக. இலக்கிய நூல்களே வழுவறத் தெளிந்து கொள்வ தற்கு இலக்கணப் புலமை தலைமையாய் அமைந்துள் வளது. இந்த இயல் அறிவால் கல்வி உயர்வாய் ஒளி பெற்று வருகிறது. கல்வியறிவுக்கு எழுத்து மூல முத லாயுள்ளது. அந்த மூல முதலே அறிவதிலிருந்தே கல்வி நெறியே உருவாகி நேரே ஒளிமிகுந்து வருகிறது. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும். (நறுந்தொகை) எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்- மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல் நூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப் புற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும்; கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும்; அந்நெறி இப்பால் உலகத்து இசைநிறீஇ உப்பால் உயர்ந்த உலகம் புகும். (நான்மணிக்கடிகை) எழுத்தறிவால் விளேங்து வரும் உயர் நலன்களே இவை உணர்த்தியுள்ளன. பொருள் நிலைகளேயும் குறிப் புகளேயும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்க.