பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2076 திருக்குறட் குமரேச வெண்பா மருளே நீக்கி மாசறு காட்சியை அருளுதலால் கல்வியின் அதிசய மாட்சியை அறிந்து கொள்ளலாம். வாழும் உயிர் என்றது மக்களே. கல்வியைக் கற்று உயர வல்லவர் மாந்தரே ஆத லால் அவரை இங்ங்னம் குறித்தார். உயிர் வாழ்வை உயர் வாழ்வாக ஆக்குவது கல்வியே; அதனே உரிமை யுடன் இளமையிலேயே தழுவி விழுமிய மதிமானப் உயர்க என்பது தெரிய வங்தது. இதமாய் வாழாத உயிர்களும் உள ஆதலின் அத னினும் வேறுபாடு தெரிய வாழும் உயிர் என வரைந்து காட்டிர்ை. கல்வி தோய்ந்ததே நல்ல உயிர். - உடலிலுள்ள கண்கள் நேரே தோன்றுகிற உருவப் பொருள்களே மாத்திரம் காணுகின்றன. உயிரின் கண் ஆகிய கல்வி யாண்டும் பரந்து விரிந்துள்ள எல்லா அருவப் பொருள்களேயும் இருந்த இடத்தில் அமைதி யாய் அமர்ந்து கொண்டே தெளிவாத் தெரிந்து உள்ளம் உவந்து உறுதி செய்து கொள்ளுகின்றது. ஊனக் கண்ணும் ஞானக் கண்ணும் ஒருங்கே உணர வந்தன. கல்வியைக் கண் என்றது அதன் அருமை பெருமை களேக் கருதியுணர்ந்து உரிமையுடன் பேணி யாண்டும் மேன்மையாய் மனிதர் இனிது உயர வேண்டியே. கண் உயிரின் ஒளி: கல்வி உணர்வின் ஒளி. கண்ணே இழந்தவன் குருடன யுழலுகின்ருன். கல்வியை இழந்தவன் மடையன யிழிகின்ருன். கண் இல்லையேல் உடல் ஊனமாம். கல்வி இல்லையேல் உயிர் ஊனமாம். ஊனமும் ஈனமும் உருமல் ஞானமாய் உயர வேண் டுமால்ை கல்வியை நலமாய்க் கற்றுக் கொள்ள வேண் டும். அவ்வாறு கொண்டால் எல்லா நன்மைகளேயும் அது செவ்வையாக் காட்டிச் சீர்மைகளே யூட்டியருளும்.