பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2082 திருக்குறட் குமரேச வெண்பா டாலே எருவிட முப்பழச் சாற்றின் அமுதவயல் மேலே முளைத்த கரும்போ இம் மங்கைக்கு மெய்எங்குமே. (சந்திர வாணன் கோவை) விசயராயன் என்னும் வேதியன் ஒருநாள் இவரைப் பல்லக்கில் வைத்துத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். தம் சிவிகையின் பின்னே நடந்து வந்த அம் மறையவனது அன்புரிமையையும் தமிழ் ஆர்வத்தையும் வியந்து அப்பொழுதே இவர் ஒரு கவி பாடினர். திருமாலும் ஈசனும் பின்போயும் துரது செலத்துணிந்தும் அருமா துரியத் தமிழ்வளர்த்தார் அவரோடு பங்காய் வருமா மறையவன் பேர்சாதித் தேமிக வண்டமிழ்க்குப் பெருமான் சிவிகைப்பின் சென்ருன் விசயப் பிரமனுமே. தம் புலமையால் இவர் அடைந்துள்ள மதிப்பும் மாட்சியும் இதல்ை அறியலாகும். கண் இல்லாதிருந்தும் கல்வியுடைமையால் எல்லா தலங்களேயும் எய்தி இவர் இசை மிகப் பெற்ருர். எண்ணும் எழுத்தும் உயிர்க்குக் கண் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். கண்ணுகக் கல்வியைக் கற்றுயர்க; கல்லாயேல் மண்ணு யிழிவாய் மருண்டு. கல்வி உயிர்க்குக் கண். 39.3.காலுமிரு கண்ணுமற்ருர் கற்றுயர்ந்தார் கண்ணிருந்தும் கோலிழந்தான் என்னே குமரேசா-மேலான கண்ணுடையர் என்பவர் கற்ருேர் முகத்திரண்டு புண்னுடையர் கல்லா தவர். (3) இ-ள். குமரேசா குருடும் முடமுமான இரட்டையர் கற்று உயர்ந்தார்; சந்தனு ஏன் கல்லாது இழிந்தான்? எனின். கண் உடையர் என்பவர் கற்ருேர், கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் என்க. கற்ருரது உயர்வும் கல்லாரது இழிவும் காணவங்தன. கற்றவரே உண்மையான கண்களே யுடையவர்: கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்களே யுடையவரே.