பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 愛f} Rー அகக்கண் ஆகிய கல்வியால் அடையும் பெருமை யைவேறு எதலுைம் பெறமுடியாது; ஆதலால் கல்வி யை விரைந்து கற்று உள்ளம் தெளிந்து உயர்ந்து கொள்ள வேண்டும் என இ.து உணர்த்தி யுள்ளது. அரிய மகிமைகளே அருளிப் பெரிய இன்பங்கள் தருதலால் கல்வியை உரிமையுடன் கற்றவர் எவரும் பெருமை மிகப் பெறுகின்ருர். பெற்ற பிறப்பு நன்கு சிறப்புற வேண்டின் அவர் கற்றவராக வேண்டும். விண்ணுடை யார் புகழ் நூபுர பாதர்வெல் வேல்நெடுங்கண் பெண்ணுடை யார் மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண் (அணங்கே கண்ணுடை யார்கற் றவரே கல் லார்கண் முகத்திரண்டு புண்ணுடை யார் எனக் கூறி நம் காதலர் போயினரே. (திருவெங்கைக் கோவை, 408) கலே பயின்று வரத் தலைவன் பிரிந்து போயுள்ளதைத் தோழி தலைவிக்கு இவ்வாறு உரைத்திருக்கிருள். கண் உடையார் கற்றவரே; கல்லார்கள் முகத்து இரண்டு புண் உடை யார் எனக் கூறி நம் காதலர் கல்வியுறப் போயினர் என் னும் இது நாயனர் வாய்மொழியை மருவி வந்துள்ளது. காவியக் கவிகள் திருக்குறளை எவ்வழியும் இவ்வாறு போற்றி வருவதை ஆங்காங்கு நூல்களில் பார்த்து வருகின்ருேம். பொய்யாமொழி வையக ஒளியாயுளது. கல்வி கண்ணினும் சிறந்தது; அதனேக் கருதிப் பேணி மக்கள் உயர வேண்டும் என்றே உரிமையுடன் தேவர் உணர்த்தி யுள்ளார். உணர்த்துங் திறம் வியப் பை விளேத்து உவப்பை வளர்த்து வருகிறது. கற்றவனே உண்மையான மனிதன். கல்லாதவன் புன்மையான மாடே. கல்வியாளனே நல்ல கண்களே யுடையவன். கல்லாதவன் கண்கள் பொல்லாத புண்களே. சிறந்த மனிதப் பிறப்பை அடைந்து வந்துள்ள நீங்கள் கல்லாது கழிந்தால் இழிந்த விலங்குகளாய்