பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2086: திருக்குறட் குமரேச வெண்பா ஒழிந்து போவிர்கள்: உங்கள் முகத்தில் ஒளி விழிகள் இருந்தாலும் கல்வி இல்லையேல் நீங்கள் இழி குருடர் களே என்று அருளுடன் தெளிவுறுத்தி யிருக்கிருர். புண்ணியக் கல்வியைப் போற்றி வருபவரே கண் னுடையராய்க் கண்ணியம் பெற்று விளங்குகின்ருர். கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்தில் ஒர் கண் உண்டு கற்றறி வாளர் கருதி உரை செய்யும் கற்றறி காட்டக் கயலுள வாக்குமே. (திருமந்திரம்) கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும். (சிந்தாமணி) கண் இரண் டே யாவருக்கும் கற்ருேர்க்கு மூன்றுவிழி எண்ணுவிழி ஏழாகும் ஈவோர்க்கு-நண்னும் அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றேர்க்கு அநந்தம் விழிஎன் றறி. (நீதிசாரம்) கற்றவர் மாட்சியைக் கண்களோடு இணேத்து இவை காட்டியுள்ளன. குறிப்புகளேக் கூர்ந்து ஒர்ந்து உணர்பவர் கல்வியின் கிலேயைத் தேர்ந்து கொள்வர். அகத்தில் ஒளிசெய்து ஆனந்தம் தருகின்ற கல்வி இல்லையேல் அந்த மனிதன் முகத்தில் உள்ள கண் உயிர் அற்ற உடல் போல் ஒளி அற்று இருளுகிறது. உணர் வின் ஒளியாய் உயிர்க்கு ஏமம் செய்து வருதலால் கல்வி இங்ங்னம் அதிசய கிலேயில் துதி செய்யப் பெற்றது. மணிக்கு ஒளிபோல் மனிதனுக்குக் கல்வி. கல்வி கண்ணினும் சிறந்தது; எண்ணரிய இன்ப கலன்களே இனிது தர வல்லது; புண்ணிய கிலேயமான அதனே மனிதன் புனிதமாப் போற்றிக் கொள்ள வண்டும். அதனைப் பெற்ற அளவு பெருமையாம். விண் ஒளி மேதினி விளக்கும்; மேவிய கண் ஒளி காட்சியைக் காட்டும்; கல்வியாம் எண் ஒளி இருமையும் இனிது நல்கியே தண் ஒளி யாயருள் தழைத்து நிற்குமே.