பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2088 திருக்குறட் குமரேச வெண்பா குயவன் தன் மகளே மருமகன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனன். அப்படிப் போகும் பொழுது பிள்ளேப் பாசத்துடன் மெய் திண்டி அவளே அருகனைத் துச் சென்ருன். அவனது மெய் அன்பைக் கண்ட முடவர் அங் கிலேமையைப் பாதி வெண்பாவில் வினேதமாக ஒதிர்ை. அந்தப் பாட்டு ஈங்கு அறிய வுரியது. 'மாங்காட்டு வேளான் மகளே மருமகன்பால் போங்காட்டில் இன்பம் புணர்ந்தானே!?? என்று மூத்தவர் இங்ங்னம் சொல்லி முடிக்கவே இளேயவர் அதை இனிது இனத்தார்: ஆங்காணும் மக்கள் மெய் திண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.?? என்று தொடுத்து முடித்தார். அண்ணன் உரைத்த குறிப்பை உணர்ந்து இவ்வண்ணம் திருக்குறளே எடுத் துப் பொருத்தமுற இணேத்திருக்கிருர். நகையும் உவகை யும் சுவை சுரங்துவர இவர் கவிகள் தொகையாய் வந்தி ருக்கின்றன. பரிசில் நாடிப் பல இடங்களில் அஆலந்து திரிந்தாலும் துறவிகள் போலவே பாசபந்தங்களின்றி சசின் அருள் தோய்ந்து இவர் வாழ்ந்துள்ளனர். ஒரு காள் அரியல் என்னும் ஊர் அருகே இருந்த குளத்தில் இவர் குளிக்கச் சென்றனர். அப்பொழுது தம் மடியில் உள்ள பணத்தைக் கரையிலிருந்த அரசடி விநாயகர் முன் வைத்தனர். குளித்து வங்து பார்க்குங்கால் பொரு ளேக் காணுேம். 'தம்பி பிள்ளையார் வேலையைப் பார்த் தாயா? நாம் கம்பிக்கையாக வைத்த பணத்தைத் தும் பிக்கையார் திருடிக் கொண்டார்' என முன்னவர் சொன்னர் பின்னவர் மெல்லப் போய்த் தொந்தி வயிற் றைத் தடவிப் பார்த்து "அண்ணு: திருடியது உண்மை யே’ என்று பெருநகை செய்தார். அவ்வமையம் இருவ ரும் சரிபாதியாப் பாடிய கவி அடியில் வருவது. ‘'தம்பியோ பெண் திருடி தாயார் உடன்பிறந்த வம்பனே நெய்திருடும் மாமாயன்-அம்புவியில் மூத்தபிள்ளே யாரே முடிச்சவிழ்த்தீர்! போமோதும் கோத்திரத்திற் குள்ள குணம்.” (இரட்டையர்)