பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2093 படரே உள்ளல் செலவும் ஆகும். (தொல்காப்பியம்) உள்ளல் என்பது வருத்தக் குறிப்பிலும் வரும் என்பது இந்த இயல் உரையால் தெரிய வந்தது. கூடிய போது உவகை மீதுார்ந்து வருகிறது: பிரிந்த பொழுது பரிவு தோய்ங்து விரிகிறது: விரியவே அரிய நீர்மைகள் உரிமையுடன் அறியவந்தன. கல்வி மனிதனத் தனி கிலேயில் உயர்த்துகின்றது. அங்ங்னம் உயர்ந்தவரைக் காணவே மக்கள் விழைந்து புகழ்ந்து மகிழ்ந்து கொள்ளுகின்றனர். உள்ளத்தில் பிரியம் மிகுந்திருத்தலால் அவர் பிரிய நேர்ந்தபொழுது அரியதை இழந்தது போல் மறுகி வருந்துகின்றனர். அறிவுகலம் கனிந்த இனிய மொழிகளும் விழுமிய செயல்களும் புலவரிடம் கலமாய் மருவி யுள்ளமையால் அவை பலரையும் வசப்படுத்திக் கொள்ளுகின்றன. அந்த உணர்வு நலன்களே அனுபவித்து மகிழ்ந்தவர் அவர் நீங்கிய பொழுது "இந்த மேதையை இனி மீண்டு என்று காண்போம்? ' என ஏங்கி நிற்பர்: அந்தப் பரிவு தோய்ந்த பாங்கு ஈங்கு நன்கு அறிய வந்தது. சிறந்த கல்வியாளர் சன சமுதாயத்துக்கும் அரச ருக்கும் நல்ல ஞான போதனைகளே நல்கி வருதலால் எல்லாரும் விரும்பி எதிர்கொண்டு கண்டு முதிர் அன் போடு பேண நேர்கின்றனர். அவருடைய மதுரமான உரைகளின் சுவைகளே நுகர்ந்தவர் நவைகள் நீங்கி நலம் பல காண்கின்றனர். எவ்வழியும் இவ்வாறு இதமும் இனிமையும் பயந்து வருதலால் கற்றவரைக் கண் எனக் கருதி மற்றவர் மகிழ்ந்து கொள்ளுகின்றனர். அவரோடு. மருவி யிருந்தால் பெருமை மிகப் பெறுகின்ருர். தேவர் அனேயர் புலவரும் தேவர் தமர்அனேயர் ஒரூர் உறைவார்-தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர் கற்ருரைக் காத லவர். (நான்மணி 76)