பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:09.4 திருக்குறட் குமரேச வெண்பா கல்லாரே ஆயினும் கற்ருரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் -தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு தண்ணிர்க்குத் தான்பயந் தாங்கு. (நாலடி 139) கற்றவரால் உலகம் அடையும் நன்மைகளே இன்ன வாறு நூல்கள் பல உணர்த்தியுள்ளன. உவமைக் குறிப்புகளே ஒர்ந்து உணர்ந்து உண்மை கிலேகளேத் தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். கல்லாரே ஆயினும் கற்ருரைச் சார்ந்து ஒழுகின் நல் லறிவு நாளும் தலைப்படுவர் என்றது உள்ளிஉணரவுரியது. புலவர் தேவர் அனேயர் என்றது அறிவின் தலைமை கருதி. புலம் = கலேயறிவு. புலமை என்னும் பண்படி யாகப் புலவர் என்னும் பேர் பிறந்துள்ளது. நேர்ந்துள்ள பேரால் அவரது கிலேமைகளே ஒர்ந்து கொள்கிருேம். தெள்ளியோர் சேர்க்கை உள்ளும் தோறும் உணர்வு வளர்ந்து உவகை சுரங்து வருகிறது. நல்ல அறிவுரைகளே நயமாய்க் கூறி உலகரை உவப்புறச் செய்வதும், அக் கூட்டத்தை விட்டு விலகித் தனியேஒதுங்கி யிருந்து நூல்களே ஆராய்ந்துவருவதும் புலவர் செயலாம் எனவும் இ.து உணரவுள்ளது. ஒத்த புலவரோடு கூடியிருந்து இலக்கியக் கலைகளே ஆராய்ந்து மகிழ்வதும், பின்பு தனியே பிரிந்து போய் அமர்ந்து அரிய அறிவு நூல்களேச் சிந்தித்து உணர் வதும் புலவர் தொழிலாம் எனப் பொருள் கொள்ளி லும் அமையும். உவப்பக் கூடி உள்ளப் பிரிவதே புலவர் வாழ்வு என்ற தல்ை உலக கிலேயோடு அவருக்கு உள்ள உறவு கிலே புலனும். அனேத்தே என்றதில் ஏகாரம் அவரது செயலேத் தனியே தெளிவுறுத்தி நின்றது. செயல் இயல் என வேறு யாதும் கூருமல் தொழில் என்றது இயற்கைப் பழக்கமாய்ச் செய்து வருகிற அவரது குல மரபின் வழக்கத்தை விளக்கி நின்றது.